dc.contributor.author | Arjuna, K. | |
dc.contributor.author | Pavanesan, V. | |
dc.date.accessioned | 2024-03-12T06:20:50Z | |
dc.date.available | 2024-03-12T06:20:50Z | |
dc.date.issued | 2024 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10219 | |
dc.description.abstract | மட்டக்களப்பு மாவட்டத்தின் பண்பாட்டு பாரம்பரியத்தில் ஆகமம் சார்ந்த வழிபாடும், ஆகமம் சாராத வழிபாடும் நிலவி வருகின்றன. இரு வகையான வழிபாடுகள் நிலவி வருகின்ற போதும் ஆகமம் சாராத வழிபாடே அதிகளவில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆகமம் சாராத வழிபாட்டின் சிறப்பினையும் சடங்கு முறைகளையும் ஆராய்வதே இந்த ஆய்வினுடைய பிரதான நோக்கமாக உள்ளது. இப்பிரதேசத்தில் பயில் நிலையிலுள்ள ஆகமம் சாராத வழிபாடு மற்றும் சடங்கு முறைகள் இப்பிரதேசத்திற்கே உரியவை. இங்கு நிகழ்த்தப்படுகின்ற ஒவ்வொரு சடங்கு முறையும் தெய்வத்திற்கு தெய்வம், கிராமத்திற்கு கிராமம் வேறுபட்டும் தனித்துவமிக்கவையாகவும் விளங்குகின்றன. இங்கு ஆகமம் சாராத சக்தி வழிபாட்டு முறைகள் மட்டக்களப்பு பிரதேசத்திற்கேயுரிய வழிபாட்டு நூல்களான பத்தாசிகளை அடியொற்றி நிகழ்த்தப்படுவது இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பத்தாசி கோயில்களுக்குக் கோயில் வேறுபடுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அநேக ஆலயங்கள் ஆரம்பத்தில் ஆகமம் சாராத முறையில் தற்காலிகப்பந்தல் அமைக்கப்பட்டு அதன் பின்னர் ஆகம முறையிலான ஆலயக் கட்டுமானங்களாக வளர்ச்சியடைந்தமை பலப்படுகின்றது. ஆகம மரபிலான கட்டடக்கலை மரபுகள் அங்கு அமைந்து விளங்குகின்ற போதும் அவ்வாலயங்களில் ஆகமம் சாராத வழிபாட்டு முறைகளே இன்றும் நடைமுறையிலுள்ளமை இந்த ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது. முட்டக்களப்பு பிரதேசத்தில் ஆகமம் சாராத வழிபாட்டில் சாதிக்குரிய தெய்வங்கள் என்ற ஒரு வழக்க முறைமை காணப்படுவதும் சில சாதியினர் சில தெய்வங்களை வணங்குவதில்லை என்பதம் இந்த ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | மட்டக்களப்பு | en_US |
dc.subject | சடங்கு | en_US |
dc.subject | பத்தாசி வழிபாடு | en_US |
dc.subject | ஆகமம் | en_US |
dc.title | மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆகமம் சாராத வழிபாடும் சடங்கு முறைகளும் | en_US |
dc.type | Article | en_US |