DSpace Repository

தற்கால சமூகத்தில் வர்த்தகமயமாகிய கலையும் கலைஞனின் நிலைப்பாடும்: மார்க்ஸிச சிந்தனையினை அடிப்படையாகக்கொண்ட ஓர் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Saruka, S.
dc.contributor.author Thiraviyanathan, T.
dc.date.accessioned 2024-03-12T05:59:21Z
dc.date.available 2024-03-12T05:59:21Z
dc.date.issued 2024
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10216
dc.description.abstract கலை என்பது மனிதனின் அக அனுபவங்களைக் குறியீடுகள் மூலமும் அதேசமயம் உடலாலும் உள்ளத்தாலும் ஒருங்கிணைந்து செயல்படுகின்ற ஒரு நுட்பமான திறனாகும். சுpற்பம், ஓவியம், நடனம், கட்டிடக்கலை, இசை, நாடகம், கவிதை போன்ற அனைத்தும் கலை என்ற அகன்ற வரையறையுள் அடங்கும். புண்டைய காலங்களில் கலையென்பது தனக்கான அழகியல் விதிகளுக்கு அமைய செயற்பட்டு வந்ததென்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கலைகள் பெரும்பாலும் சமூகத்துடன் இணைந்து செயற்படுகின்ற ஒள்றாக காணப்பட்;டது. மனிதனுடைய கற்பனைத் திறனைப் போதிப்பதாகவும் அதேசமயம் மனித வாழ்க்கைக்கான ஒழுக்க நெறிகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. இருப்பினும் காலப்போக்கில் கலைகள் தனக்கான அழகியல் விதிகளிலிருந்து மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. மனிதன் தனது தேவைகளையும் விருப்பங்களையும் அடிப்படையாகக் கொண்டு கலைகளை தனக்கு ஏற்றாற் போல மாற்றி அமைத்துக் கொள்கின்றான். மனிதனால் ஆக்கப்பட்ட கலையே தற்போது முதலாளித்துவ வர்க்கம் என்கின்ற மனித சமூகத்தினால் வர்த்தகமயமாக்கப்பட்டு விற்பனைப்பண்டமாக மாற்றமடைகிறது. இம்மாற்றங்கள் நடைபெறுவதற்கு நுகர்வோரின் வகிபங்கு முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. குறிப்பாக நுகர்வோரினை மையப்படுத்தி கலைகளை வெளிக்கொணர்கின்ற வேளையில் அவை தமக்கான அழகியல் விதிகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மார்க்ஸிச சிந்தனைகளின் அடிப்படையில் கலையானது முதலாளித்துவ உற்பத்தி முறையினுள் ஆளுகைக்குட்பட்டு தன்னியல்பிலிருந்து அன்னியப்பட்டு விற்பனைப் பண்டமாக எவ்; வாறு மாற்றமடைகின்றது என்பதை தற்காலத்தின் அடிப்படையில் தெளிவுபடுத்துகின்ற ஆய்வாக இவ்வாய்வு அமைகிறது. இந்நிலையில் கலைகளின் செல்நெறிப்போக்கு, கலை மாற்றத்திற்கான காரணங்கள், கலைஞனுடைய நிலைப்பாடு மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தினரின் வகிபங்கு என்பன பற்றி தெளிவுபடுத்துவதாக இவ்வாய்வு அமைகிறது. மார்க்ஸினடிப்படையில் கலைகள் விற்பனைப் பண்டமாக மாற்றப்படக் கூடாது என்ற கருத்து, கலைகள் மனித தேவையின் அடிப்படையில் தோற்றம் பெற ஆரம்பித்தபோதே மீறப்பட்டு விட்டது. முதலாளித்துவ வர்க்கத்தினரின் செயற்பாடு தான் கலை மாற்றத்திற்கான காரணம் என்ற போக்கினைத் தாண்டி, நுகர்வோரின் எதிர்பார்ப்பும், கலைகளின் நிலையான தன்மையினை பேணுவதற்கான நவீனமயமாக்கப்பட்ட ஊடகங்களின் உட்படுத்தலும் கலைகள் வர்த்தகமயமாக்கப்பட்டதற்கான காரணங்களாக அமைகின்றன. இங்கு கலைஞனுடைய நிலைப்பாட்டினைப் பார்க்கின்ற பொழுது, பரிணாம வளர்ச்சியினை எதிர்பார்க்கின்றவனாக இருப்பினும் கலைகளினுடைய மரபு மாற்றத்தை ஏற்க மறுக்கின்றவனாக காணப்படுகின்றான். இந்த வகையில் இவ்வாய்விற்கான முதல் நிலைத் தரவுகள் தற்கால அழகியல் கலைஞர்களுடனான கலந்துரையாடல் மூலமும், இரண்டாம் நிலைத் தரவுகள் கலை மற்றும் முதலாளித்துவ வர்க்கம் தொடர்பாக எழுந்த நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இணையத்தளப் பதிவுகள் என்பவற்றிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject கலை en_US
dc.subject தற்காலப்போக்கு en_US
dc.subject வர்த்தக மயம் மார்க்ஸிய சிந்தனைகள் en_US
dc.subject கலைஞனுடைய நிலைப்பாடு en_US
dc.title தற்கால சமூகத்தில் வர்த்தகமயமாகிய கலையும் கலைஞனின் நிலைப்பாடும்: மார்க்ஸிச சிந்தனையினை அடிப்படையாகக்கொண்ட ஓர் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record