Abstract:
ஒரு நாட்டுமக்களின் நாகரிகத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, கலைகலாச்சாரங்களை, வரலாற்றை மற்றும் நாட்டுநடப்பை உண்மையான முறையில் படம்பிடித்துக்காட்டுவதே நாட்டுப்புறவியல் ஆகும். இது வாழையடி வாழையாக வாழ்ந்து வளர்ந்து வருகின்ற நாட்டுப்புற வாழ்வையும், வாழ்வுக்கூறுகளையும் மக்களின் படம்பிடித்துக்காட்டுகின்றன. இது ஏட்டிலே வராத, எழுத்திலே காணமுடியாத ஆனால் உள்ளத்திலே ஊறிக்கிடக்கும் எத்தனையோ எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் எடுத்துக்காட்டும். நாட்டுப்புறவியலை இருவகையாக வகைப்படுத்தலாம்.