DSpace Repository

திரு அவையின் சமூகப் போதனைகளின் பின்னணியில் 'அரகலய' மக்கள் எழுச்சிப் போராட்டங்கள்: ஒரு நோக்கு

Show simple item record

dc.contributor.author Mery Jerila, J.
dc.contributor.author Ravichandran, M. V. I.
dc.date.accessioned 2024-02-27T08:07:28Z
dc.date.available 2024-02-27T08:07:28Z
dc.date.issued 2024
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10136
dc.description.abstract இலங்கையில் ஊழல் மோசடிகள், பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை, பாரபட்சத்தன்மை, இன உரிமை மறுப்பு மற்றும் சமூக அநீதிகளுக்கெதிராக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களின் உரிமைக்கான குரலாகவே போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டத்தின் இலக்கு அநீதிய எதிர்ப்பதாக அமைகிறது. 2022ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டமானது ஆய்வின் தேடலைத் தூண்டியது. போராட்டங்களின் போது மக்கள் மத்தியில் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு மனித மாண்பற்ற ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் மத்தியில் சமூக அநீதிகள் அதிகரிக்க பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமெனவும் தமது உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டுமெனவும் வீதிகளில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரகலய போராட்டமானது அறுபத்தொன்பது வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியை பதவ விலகச் செய்து அரசியல் மாற்றத்தினைக் கொணரக் காரணமாக அமைந்தது போராட்டத்தினால் ஏற்பட்ட வெற்றி தோல்வியினை பற்றிய தெளிவினைப் பெறுதலே ஆய்வுப் பிரச்சினையாக குறிப்பிடப்படுகிறது. போராட்டங்களின் போது மக்கள் எதிர்நோக்கிய சவால்கள், மக்களுக்குக் கிடைத்த நன்மை, தீமையான விடயங்கள், இடம்பெற்ற அரசியல் மாற்றங்கள் தொடர்பான விடயங்கள், போராட்டங்களின் போது திருஅவையின் பங்களிப்பு தொடர்பான விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. போராட்டங்களின் வெற்றியானது ஒன்றிணைவுகள் மூலமாகவே சாத்தியப்படுகின்றன. எனவே நீதிக்காக, மனித உரிமைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்களின் போது திருஅவை அங்கத்தவர்கள் பார்வையாளர்களாக இராமல் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து கலந்து கொண்டு நீதிக்காக குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இவ் ஆய்;;;;;;வானது உணர்த்தி நிற்கின்றது. மேலும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்பாக திரு அவைக்குள்ள பொறுப்பையும் அவற்றிற்கு திருஅவையின் சமூகப்போதனைகளின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டுகின்றது. இவ்வாய்வில் திருவிவிலியம் மற்றும் திருஅவையின் சமூக நீதிக் கருத்துகள் தொடர்பான விடயங்களை பெற்றுக்கொள்ள நூல்கள் பயன்படுத்தப்படுவதனால் உய்த்தறிவு முறை பிரயோகிக்கப்படுகிறது. மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் மத்தியில் திரு அவையின் பங்களிப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள சான்றுவழி ஆதாரமுறை பயன்படுத்தப்படுகிறது. இவ்வாய்வில் திரு அவையின் சமூகப் படிப்பினைகள், மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த உதவுகின்றன. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject திரு அவையின் சமூகப்போதனைகள் en_US
dc.subject மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் en_US
dc.subject சமூக நீதி en_US
dc.subject மக்களின் உரிமை en_US
dc.subject அநீதி en_US
dc.title திரு அவையின் சமூகப் போதனைகளின் பின்னணியில் 'அரகலய' மக்கள் எழுச்சிப் போராட்டங்கள்: ஒரு நோக்கு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record