DSpace Repository

பாரதி பாடல்களில் சாக்த வைணவ சிந்தனைகள்

Show simple item record

dc.contributor.author Piraghan, K.
dc.contributor.author Ramanaraja, S.
dc.date.accessioned 2024-02-27T07:51:54Z
dc.date.available 2024-02-27T07:51:54Z
dc.date.issued 2024
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10133
dc.description.abstract ஆங்கிலேய காலனித்துவத்தின் ஊடாக ஆசிய நாடுகளில் நவீனத்துவச் சிந்தனைகள் முதன்மை பெறத் தொடங்கின. அதனூடாக நவீனு கல்வி, ஆங்கில மொழி, அரச உத்தியோகம், புதிய வர்க்க உருவாக்கம், கிறிஸ்தவ ஆதிக்கம் என்பன அறிமுகமாயின. அதேவேளை சுதேச பாரம்பரிய உணர்வு, தேச விடுதலை போன்றனவும்; வீறுபெற்றன. ஆங்காங்கே கலகங்களும் நடைபெறத்தொடங்கின. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. அவ்வாறான சமூகக் கொதிநிலைச்சூழலில் பிறந்தவரே சுப்பிரமணியபாரதியார் ஆவார். பாரதியுகம் எனக் கருதுமளவுக்கு இருபதாம் நூற்றாண்டு தமிழ்ச்சூழல் பாரதியின் கவிதைகளாலும், சிந்தனைகளாலும், வீறாந்த சொற்களாலும் சூழப்பட்டிருந்தது. புhரதி கவிதை, கதை, கட்டுரை, ஊடகம் எனப் பல்பரிமாணமுடைய சிந்தனையாளராயினும் அவரது அடையாளம் கவிதையே. அதனால்தான் அவர் மகாகவி எனப்படுகிறார். பாரதியின் கவிதைகள் தேசியம், சமூக பெண் விடுதலை, சமயம், தத்துவம், மொழி, இயற்கை, காவியக்கதைகள், சுயசரிதம் எனப் பல்வேறு கருத்தியல்களால் ஆனவை. ஆயினும் எல்லா கவிதைகளுக்குள்ளும் தெய்வீக அல்லது ஆன்மீக உணர்வு இழையோடியிருந்தது. அதிலும் குறிப்பாக பாரதி சக்தி உபாசகனாக இருந்தார். ஆத்தோடு கண்ணனை பலவாறு கண்டு வழிபட்டார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு கட்டமைக்கப்பட்டுள்ளது. பாரதி பாடல்களில் சாக்த, வைணவ சிந்தனைகள் பற்றியதாக இந்த ஆய்வு அமைகிறது. பாரதியின் பாடல்கள் சமயம், தத்துவம் எனப் பன்முக நிலையில் பலர் ஆய்வு செய்திருப்பினும் சாக்த, வைணவ நெறி சார்ந்து சமய தத்துவவியல் தளத்தில் ஆய்வுகள் அரிதாகவே வெளிவந்துள்ளன. பாரதி பாடல்களில் காணப்படுகின்ற சாக்த, வைணவ நெறி சார்ந்த சமய, தத்துவ சிந்தனைகளைக் கண்டறிந்து வெளிக்கொண்டு வரும் நோக்கில் வரலாற்று ஆய்வு, விபரண ஆய்வு முறை ஆகிய ஆய்வு முறையியல்களைப் பயன்படுத்தி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது பாடல்கள் முதல்நிலை மூலங்களாகவும் அவரது படைப்புகளை முன்னிறுத்தி வெளிவந்த ஆய்வு நூல்கள், கட்டுரைகள், இணையப்பக்கங்கள் என்பன துணைநிலை மூலங்களாகவும் கொள்ளப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சமய தத்துவத் தளத்தில் பாரதியை நோக்க முற்படுபவர்களுக்கு இவ்வாய்வு துணைபுரியும் என நம்பப்படுகிறது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject பாரதி en_US
dc.subject சக்தி en_US
dc.subject விஷ்ணு en_US
dc.subject கவிதைகள் en_US
dc.subject ஆளுமை en_US
dc.title பாரதி பாடல்களில் சாக்த வைணவ சிந்தனைகள் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record