DSpace Repository

சைவசித்தாந்தத்தில் அத்துவா

Show simple item record

dc.contributor.author Tharangan, S.
dc.contributor.author Chandrasekaram, P.
dc.date.accessioned 2024-02-27T07:45:06Z
dc.date.available 2024-02-27T07:45:06Z
dc.date.issued 2024
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10131
dc.description.abstract இந்திய மெய்யியல்களில் முக்கியமான இடத்தினைப் பெறும் சைவசித்தாந்தமானது பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களினைப் பற்றிப் பேசுகின்றது. இவற்றில் பாசப்பொருள்களாகச் சுட்டப்படுபவை ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றும் ஆகும். இவற்றில் மாயை என்பது மா10யா எனப்பிரித்து உலகின் தோற்ற ஒடுக்கத்திற்கு காரணமான பொருளாகச் சுட்டப்படுவதுடன் இம்மாயையிலிருந்து காரியப்படும் அத்துவா என்பது 'வழி' எனப்படும். அதாவது உயிர்களிடத்து வினைகள் வருவதற்கும் அவ்விதம் பெறப்பட்ட வினைகள் நீங்குவதற்குமான வழியே இதுவாகும். இந்திய மெய்யியல்களில் ஆங்காங்கே சிதறி காணப்படும் கருத்தியல்களில் ஒன்றாக அத்துவா காணப்படகின்றது. அவற்றுள் சைவ சித்தாந்தம் முன்வைக்கின்ற அத்துவா பற்றிய கருத்தியல் எவ்வளவு தூரம் இந்திய மெய்யியல் சிந்தனை மரபோடு ஒத்து அல்லது மாறுபட்டு போகின்றது என்பதும் அது தனக்கான கோட்பாட்டுக் கருத்தியலில் எவ்வண்ணம் அத்துவாவின் ஊடாக உருவாக்கியுள்ளது என்பதும் இங்கு ஆய்வுப் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மேலும் இந்திய மெய்யியல் தரிசனங்களில் எழுத்தாளப்பட்டள்ள அத்துவா பற்றிய கருத்துக்களை கண்டறிவதன் வழி சைவ சி;த்தாந்த அத்துவாவின் முதன்மையை வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும் மேலும் இவ்வாய்வானது தத்துவம், அறிவியல் சார் நோக்கின் படி பகுப்பாய்வு முறை, விளக்க முறை போன்றவற்றுடன் ஒப்பீட்டு ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது. வேதம் மற்றும் உபநிடதத்தில் அத்;துவா பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் ஈசானம், அகோரம், தற்புருஷம், வாமதேவம், சத்தியோஜாதம் மதலான ஐந்து மந்திரங்களுடன் சடங்க மந்திரம் ஆறும் சேர்த்து பதினொரு மந்திரம் பேசப்படுவதுடன் எண்பத்தொரு பதங்களுடன் வன்னம் ஐம்பத்தொன்றும், புவனம் இருநூற்று இருபத்து நான்கும், கலை ஐந்தும், முப்பத்தாறு தத்துவமும் பேசப்பட்டுள்ளதுடன் அத்துவ சுத்தி பற்றியும், சாங்கிய யோகம், நியாயம் வைஷேடிகம் மற்றும் மீமாம்சையில் கூறப்பட்டுள்ள அத்துவா பற்றிய கருத்துக்கள் பேசப்பட்டுள்ளன. அத்தோடு எதிர்காலத்தில் அத்துவா பற்றிய ஆய்வினை மேற்கொள்பவருக்கு இந்த ஆய்வு ஒரு வழிகாட்டியாக அமைகிறது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject மாயை en_US
dc.subject அத்துவா en_US
dc.subject சைவசித்தாந்ததம் en_US
dc.subject அத்துவசுத்தி en_US
dc.subject அறுவகைத்தரிசனம், en_US
dc.subject பொருள் en_US
dc.subject மெய்ப்பொருள் சஞ்சிகை en_US
dc.title சைவசித்தாந்தத்தில் அத்துவா en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record