Abstract:
சமூகத்துள் கலை என்பது மிகவும் காத்திரமான ஒரு மூலக்கூறாகும். சமூகத்தை வழிப்படுத்துவதற்கான கருவியாகக் காலந்தோறும் இசை சமூக ஆர்வலர்களால் கையாளப்பட்டிருக்கின்றது என்பது தமிழ் வரலாறுசுட்டுகின்ற மெய்ப்பொருள். இந்த வகையிலே காலேட்சபம் என்பது 'காலத்தைப்போக்குதல்' என்று அறியப்படும் ஒரு சமஸ்கிருத சொல்லாகும். நமது முன்னோர் காலத்தைப ; பொன்னாகப் போற்றினர். இதற்கெனப் பல கதைகள ; பகர்ந்தனர். அதில் தர்மம், நீதி, வீரம், போன ;ற செறிந்த கருத ;துக்கள் மிகுதியாக இருந்த வீரநாயகர்களின் சரித்திரக்கதைகள் கூறப்பட்டன. இதனைக் கேட்ட மக்கள் நல்ல பண்புகளை வளர்த்தனர். மனதில் பசுமரத்தாணியாக இக்கருத்துக்கள் வேரூன்றின. வேதகாலத்தில் 'ஆக்யானம்' என்றும், பின்னர் புராணங்கள் எழுதப்பெற்ற பொழுது பௌராணிகர்கள் அவற்றை மக்களுக்கு உபதேசித்தும், பின்னர் பாகவதர்கள் பக்தி, இசை இரண்டினையும் கலந்து கதைகள் கூறியும் வந்தனர்.