dc.contributor.author | Suhanya, A. | |
dc.date.accessioned | 2023-12-29T05:18:44Z | |
dc.date.available | 2023-12-29T05:18:44Z | |
dc.date.issued | 2023 | |
dc.identifier.issn | 1391-6815 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10012 | |
dc.description.abstract | உலகிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு இனங்களும் தம்மை ஏதோ ஒரு வகையில் அடையாளப்படுத்திக் கொள்கின்றன. இதன் மூலம் உலக அரங்கிலே தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்ள விளைகின்றன. இந்த வகையான இனங்காட்டுதல் என்பது ஒரு சமூகத்தின் பல வகையானவற்றின் வெளிப்பாடுகளாக இருக்க முடியும். தனது பண்பாட்டுக் கூறுகளைப் புறவயமாக வெளிப்படுத்த முயலும் போது ஒவ்வொரு இனமும் தம்மை இனங்காட்டிக் கொள்கின்றன. பரஸ்பரம் புரிதலுக்குள ;ளாகின்றன. பூர்வீக சமூகம் உணர்ச்சிகளின் பின்னல்களால் வழிப்படுத்தப்பட்டது. இயற்கையின் உந்து சக்தியின் வழியான ஒலி வடிவங்கள் செயற்பாடுகளை அடையாளமிட்டன. பின்வந்த காலப்பகுதிகளிலே தனது ஆற்றலுக்கு ஏற்ப உணர்வெழுச்சிகளை ஓர் ஒழுங்கிற ;குட்படுத்திய போது அதன் வெளிப்பாடுகள் அழகியலம்சம் தோற்றம் பெற்றன. மனிதனை இயற்கையின் ஒரு பகுதியாக அறிஞருலகம் காண்கிறது. இயற்கை அழகியலம்சங்களின் கூட்டிணைவால் ஆனது. எனவே மனிதனும் அழகியல் அலகுகளினது கூட்டமைவே. இந்த வகையிலே சமூகத்தின் கூட்டமைவிலே அழகியல் முக்கியம் பெறுவது தவிர்க்க முடியாததாகின்றது. அழகியல் மனிதனை மானுடத்துவத்தோடு ஒன்று சேர்த்து முழு மனிதனாக்குகிறது. ஒவ்வொரு பண்பாட்டிலும் முதன்மைக்கூறாக இயங்கி வரும் இசையானது தான் வழங்குகின்ற பண்பாட்டின் சிறப்புக்களை வெளிப்படுத்தி நிற்பனவாக இருக்கின்ற அதேசமயம் பண்பாட்டு தனித்துவங்களைப் பாதுகாக்கவும் அடுத்த சந்ததிக்குக் கடத்தவுமான செயற்பாடுகளைச் செய்து வருகின்றது. எந்தவொரு பண்பாட்டையும் ஆராய்கின்ற பொழுது அதன் இசை மரபினைத் தவிர்த்து நோக்குவது என்பது முழுமையமற்ற ஒரு ஆய்வு முடிவினையே தருவதாக அமையும். ஒவ்வொரு பண்பாடும் தன்னுடைய கலை மரபுகளிலே சாஸ்த்திரிய வடிவம் (ஊடயளளiஉ யுசவ) நாட்டார் வடிவம் (குழடம ளவலடந) என இரு தளங்களைக் கொண்டிருப்பது வழக்கம். சாஸ்த ;திரிய வடிவம் என்னும்போது சீராகக் கட்டமைக்கப்பட்ட, கற்றல் கற்பித்தலுக்குட்படுத்தப்பட்ட வடிவமாகக் காணப்படும். நாட்டார் மரபு என்கின்ற பொழுது பண்பாட்டு சமூக ஊடாட்டத்தோடு இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டவை. பண்பாட்டின் மூலவேர்களை, அடையாளங்களை தெளிவாக வெளிப்படுத்துபவை. இந்தக் கலைப்படைப்புக்கள் செவிவழிமூலமாகவே சந்ததிக்கடத்தல் செய்யப்படுகின்றது. அக்கணத்தே தோன்றி காற ;றிலே கலந்துவிடுவது. உள்ளத்து உணர்ச்சிகளின் இசைக்கோலங்களாய் வெளிப்படுபவை. பண்பாட்டினைப் படிப்பதற்குரிய களஞ்சியமாக திகழ்பவை. ஒப்பாரிப்பாடல்கள் நாட்டார் மரபினுள ; அடங்கும். மனிதனுடைய துன்பியல் அனுபவத்தினைப் பாடலாக வெளிப்படுத்துவது. துன்பத்தின் துயர் நீக்குகின்ற பாடல் வடிவங்களாக இவை சமூகத்திலே பயன்படுத்தப்படுகின்றன. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | South Eastern University of Sri Lanka | en_US |
dc.subject | ஒப்பாரி | en_US |
dc.subject | சமூக்கலை | en_US |
dc.subject | சந்ததிக்கடத்தல் | en_US |
dc.subject | சாஸ்திரியகலை வடிவம் | en_US |
dc.subject | நாட்டார் இசை | en_US |
dc.title | நாட்டார் கலைகளில் ஒப்பாரிப்பாடல்கள் - ஓர் இசையியலாய்வு | en_US |
dc.type | Article | en_US |