Abstract:
இலங்கையின் வடபகுதியின் முதன்மையான மாவட்டமான யாழ்ப்பாணத்தின் காட்டூன் சித்திரங்கள் சமூகப் பிரச்சினைகள், தனிமனிதப் பிரச்சினைகள், அரசியல்ப் போக்குகள்
போன்றவற்றை நகைச்சுவையாக விமர்சிப்பதாகவும் கேள்விக்குள்ளாக்குவதாகவும்
அமைகிறது. இது மக்களை சிந்திக்கத் தூண்டுவதாகவும் கலை என்றவகையில் அதன்
அழகியல்ப் பண்பாலும் கருத்து வெளிப்பாட்டினாலும் மக்களால் ரசிக்கப்பட்டு மக்களை
மகிழ்வூட்டுவதாகவும் காணப்பட்டு வருகிறது. இந்தவகையில் சிரித்திரன் சுந்தர் எனும்
யாழ்ப்பாணத்துப் புகழ் பெற்ற காட்டூன் ஓவியரின் காட்டூன் சித்திரங்கள் அவற்றின்
அமைப்பாலும் அவற்றின் வெளிப்பாட்டாலும் மக்கள் மத்தியில் எத்தகைய இடத்தினைப்
பிடித்திருக்கின்றன என்பதை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகிறது. இவ்வாய்வானது
வரலாற்றாய்வு மற்றும் விவரண ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றது.