DSpace Repository

சமூக உளப் பிரச்சினையாக உருவெடுத்துவரும் வன்முறைக் கலாச்சாரம்: யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக்கொண்ட ஓர் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Thushiyanthan, V.
dc.contributor.author Thiraviyanathan, T.
dc.date.accessioned 2023-07-14T08:42:06Z
dc.date.available 2023-07-14T08:42:06Z
dc.date.issued 2022
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9612
dc.description.abstract அண்மைக் காலமாக இடம்பெற்றுவருகின்ற அடிப்படைச் சமூக உளவியல் பிரச்சினைகளில் ஒன்றாக வன்முறைக் கலாச்சாரம் காணப்படுகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சமூக நலன்பேணும் அமைப்புக்கள், உயர் நீதிமன்றங்கள், பொலிஸ் அமைப்புகள், உள ஆற்றுப்படுத்தல் நிலையங்கள் போன்றன இவ்வன்முறைக் கலாச்சாரத்தை இல்லாது ஒழிக்க பல ஒழுக்காற்றுச் சட்டங்களினையும் விழிப்புணர்வுச் செயல்திட்டங்களினையும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. அத்துடன் நீதிமன்றங்கள் வன்முறைகளைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனங்கள் அழுத்தங்களைத் தெரிவித்துவருகின்றன. இருந்தும் மக்கள் மத்தியில் வன்முறைக் கலாச்சாரத்தால் ஏற்படும் உளச் சமூகத் தாக்கங்கள் மற்றும் அதன் வீரியத்தன்மை என்பன கட்டுப்படுத்தமுடியாதவகையில் நீண்டுகொண்டு செல்கின்றன. நீதிமன்றங்கள் வன்முறைக் கலாச்சாரம் பற்றி குறிப்பிடும்போது, வன்முறையானது சமூக ஒழுக்க நியமங்களுக்கு முரணான செயற்பாடு என்பதோடு கொடூர எண்ணத்துடன் செயற்படுத்தப்படும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இதன்விளைவுகளாகக் குழுமோதல்கள், உடல் ரீதியான பாதிப்புக்கள், பாலியல் துஸ்பிரயோகங்கள், வாள்வெட்டுக் கலாச்சாரம், தகாத தொடர்புகள் எனப் பல்வேறுபட்ட சம்பவங்கள் இடம்பெறுவதனை நோக்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் யாழ்ப்பாணச் சமூகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. இதனைக் கவனத்தில்கொள்ளாவிடின் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி நேரிடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை எனவேதான், வன்முறைக் கலாச்சாரத்திற்கான காரணங்களையும் அது ஏற்படுவதற்கான பின்புலங்கள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கையாளுதல் என்பன இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். ஆய்விற்கான தரவுகளாக வன்முறைகள் தொடர்பாக எழுதப்பட்ட நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியங்கள், இணையத்தளப் பதிவுகள் என்பவற்றினை அடிப்படையாகக்கொண்டு ஆய்வுசெய்யப்பட்டுள்ளதோடு கட்டமைக்கப்பட்ட நேர்காணல்கள், பகுப்பாய்வு முறை போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject வன்முறைக் கலாச்சாரம் en_US
dc.subject மனித உரிமை மீறல்கள் en_US
dc.subject சமூகப் பிரச்சினைகள் en_US
dc.subject சவால்கள் en_US
dc.subject நடத்தை மாற்றம் en_US
dc.title சமூக உளப் பிரச்சினையாக உருவெடுத்துவரும் வன்முறைக் கலாச்சாரம்: யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக்கொண்ட ஓர் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record