DSpace Repository

ஈழத்து பக்தி இலக்கிய மரபில் கல்வளை அந்தாதி ஒரு நுனித்த பார்வை

Show simple item record

dc.contributor.author Thukaya, P.
dc.date.accessioned 2023-04-21T05:31:17Z
dc.date.available 2023-04-21T05:31:17Z
dc.date.issued 2022
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9334
dc.description.abstract ஈழ வரலாற்றிலே போர்த்துக்கேயர் காலத்தையடுத்துத் தோற்றம் பெற்ற ஒல்லாந்தர் ஆட்சிக்காலமானது. சைவத் தமிழ் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தையடுத்து ஒல்லாந்தர் காலப்பகுதியிலேயே பல வித்துவச்சிறப்புமிக்க தமிழ்ப்புலவர்கள் தோற்றம் பெற்றதுடன். பெருமளவு சைவத் தமிழ் இலக்கியங்களும் தோற்றம் பெற்றன. இக்காலப்பகுதியில் தோற்றம் பெற்ற புலவர் களுள் தலைசிறந்தவராக விளங்கியவர் யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத்தம்பிப் புலவரா வார். இப்புலவர் தன்னுடைய செய்யுள்களை அந்தாதி. கோவை. பள்ளு எனும் பிரபந்த வடிவங்களுக்குள் உள்ளடக்கி, சைவத்தமிழ் உலகிற்கு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். இவற்றிலே சின்னத்தம்பிப்புலவரின் வித்துவச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக அமையும் பிரபந்த வகையாக அந்தாதி காணப்படுகின்றது. அந்த வகையில் புலவரின் கல்வளையந்தாதியானது அதன் தனித்துவம் காரணமாக ஈழத்தில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் சிறப்புற்று விளங்கியமை குறிப்பிடத்தக்க தாகும். இக்கல்வளையந்தாதி யானது யாழ்ப் பாணத்தின் சண்டிலிப்பாயிலுள்ள கல்வளை எனும் பகுதியில் கோயில் கொண்டிருக்கும் விநாயகரைப் பாட்டுடைத்தலை வனாகக் கொண்டு பாடப்பட்டதே யாகும். ஈழத்துப்பக்தி இலக்கிய மரபில் கல்வளையந்தாதியானது குறிப்பிடத்தக்க இடத்தினை பெற்றுவிளங்குகின்றது எனும் கருதுகோளின் அடிப்படையில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வானது விபரண ஆய்வுமுறையியல், வரலாற்று ஆய்வு முறையியலில் நிகழ்த்தப்படு கின்றது. கல்வளையந்தாதி மூலத்திற்கு எழுந்த உரை நூல்களும் மற்றும் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள் என்ற தொகுப்பு நூலும் இவ்வாய்வின் மூலங்களாக அமைந்துள்ளன. ஈழத்துப் பக்தி இலக்கிய மரபில் குறிப்பிடத்தக்க செல்வாக்கினைச் செலுத்தும் கல்வளை யந்தாதியினை ஆய்வு செய்வதன் மூலம். இவ்வந்தாதி தொடர்பான சிறப்புக்களை இன்றைய தலைமுறை யினரும் அறிந்து கொள்வதற்கு வழிசமைத்தல் என்பது இவ்வாய்வின் பிரதான நோக்க மாகும். மேலும் இவ்வாய்வினை மேற்கொள்ள என்னைத் தூண்டிய காரணத்தினையும் இங்கு குறிப்பிடுதல் அவசியமானதாகும். எனது பிரதேசத்திற்கு அண்டிய பிரதேசமான சண்டிலிப்பாயின் கல்வளை எனும் பகுதியில் எழுந்தருளியுள்ள விநாயகரைப் பாடு பொருளாகக் கொண்டு பாடப்பட்டதே இக்கல்வளையந்தாதி என்பதுவே இவ்வாய்வினை மேற்க் கொள்ள என்னைத் தூண்டிய தெனலாம். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject கல்வளையந்தாதி. ஈழம் en_US
dc.subject பக்தி இலக்கியம் en_US
dc.subject சின்னத்தம்பிப்புலவர் en_US
dc.subject தமிழ்த்துறை en_US
dc.subject யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் en_US
dc.title ஈழத்து பக்தி இலக்கிய மரபில் கல்வளை அந்தாதி ஒரு நுனித்த பார்வை en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record