Abstract:
தமிழ்ச் சமூகப் பண்பாட்டு இலக்கியப் பரப்புகளில் சம்ஸ்கிருத மொழியோடு தமிழ் கொண்டிருந்த தொடர்பிற்குப் பல சான்றுகள் உள்ளன. அவ்வகையில் புற நானூற்றின் வழியாகப் புலப்படும் தமிழ்- சம்ஸ்கிருத உறவுகள் குறித்த தனித்துவமான செய்திகளைத் தொகுத்தாராயும் நோக்குடன் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளது. புறநானூற்றில் பொதிந்திருக்கும் சம்ஸ்கிருதச் சிந்தனைகளையும் கருத்தியல் களையும் வெளிக்கொணர்தலே இந்த ஆய்வின் முதன்மை நோக்கமாகும் இதற்க மைய வைதீக இலக்கியச் சிந்தனைகளும் கருத்துக்களும் வேதாங்கங்கள் பற்றியும் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் காணமுடிகிறது. புறநானூற்றில் தேவை யான இடங்களில் சம்ஸ்கிருதப் புராணங்களிலிருந்தும் இதிகாசங்களிலிருந்தும் தத்துவநூல்களிலிருந்தும் பொருத்தமான செய்திகளை எடுத்துக்காட்டிக் கூறி விளக்கும் பண்பினைக் காணமுடிகின்றது. அத்துடன் சம்ஸ்கிருத மொழியிலமைந்த சிவாகம வழிபாட்டுமுறை குறித்த செய்தியும் புறநானூற்றில் இடம்பெற்றிருப்பதை அவதானிக்க லாம். மேலும் மணிப்பிரவாளர் நடை தோற்றம் பெறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூற்றுக்காலத்தில் சம்ஸ்கிருதச் சொற்கள் பல தமிழில் தற்பவம் தற்சமம் என்ற இருநிலைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறாகப் புறநானூற்றின் உள்ளடக்கத்தை முறையாக ஆராய்ந்து பெறப்பட்ட சிந்தனைக்கூறுகள் பலவற்றில் கூறப்பெற்றுள்ள இடம்பெற்றுள்ள சம்ஸ்கிருதச் சிந்தனைகள் இவ்வாய்வின் வழியாகக் கண்டறியப்பட்டுள்ளன.