DSpace Repository

யூத தேசிய அரசின் உருவாக்கத்தில் மேற்குலகின் வகிபங்கு

Show simple item record

dc.contributor.author Suvetha, S.
dc.contributor.author Ganeshalingam, K.T.
dc.date.accessioned 2023-02-10T10:29:05Z
dc.date.available 2023-02-10T10:29:05Z
dc.date.issued 2017
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9083
dc.description.abstract உலக அரசியல் பொருளாதார தளம் விரிந்திருக்கும் பரப்பெல்லைக்குள் ஒடுக்கப்படும்தேசிய இனங்கள் பிரச்சினைக்கு தீர்வாக தனியரசுக்கான கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களை முன்னகர்த்தி வந்துள்ளன. இப்போராட்டங்களுக்குள் மேற்குலக நாடுகள் ஆதரவு வழங்குகின்ற போது அங்கு இருப்பு சாத்தியமாகிறது. இப்பின்னணியில் மத்திய கிழக்கில் எழுச்சி பெற்ற யூதர்களின் தேசிய அரசான இஸ்ரேலுக்கு மேற்குலக நாடுகள் வழங்கிய பங்களிப்பினை ஆய்வு செய்தல் இவ்வாய்வின் நோக்கமாகவுள்ளது. கி.மு 1200 ஆண்டளவில் யூதர்கள் கானான் தேசத்தில் (இஸ்ரேலில்) குடியேறி யூத தேசிய அரசினை அமைத்திருந்தார்கள். பின்னர் இடம் பெற்ற பல்வேறு சாம்ராச்சியங்களின் ஆக்கிரமிப்பின் போது ஐரோப்பா நோக்கி புலம்பெயர்வினை மேற்கொண்டனர். புலம்பெயர்ந்த யூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகம் குடியேறினர். யூதர்களுடைய கல்வியறிவும் மதிநுட்பமும் அவர்களை செல்வச் செழிப்புடையவர்களாக்கியது. இதனால் ஐரோப்பியர் தனது வருமானத்திலும் உற்பத்தி முயற்சிகளிலும் பெரும் நெருக்கடியை சந்தித்தனர். 19ம் நூற்றாண்டில் யூதர்களிற்கு எதிரான ஐரோப்பியர்களின் உணர்வுகள் எழுச்சியடைந்து யூத இனவெறுப்பு ஆரம்பமாகியது. இதனால் தமது பழைய தாயகக் கோட்பாடு பற்றி முழுமையான எண்ணம் கொண்ட யூதர்கள் தமது நலனுக்காக ஜியோனிசம் எனும் இயக்கத்தை உருவாக்கினர். இவ்வியக்கத்திற்கு செயல்வடிவம் எடுத்தபோது. மேற்குல நாடுகள் தமது பூரண ஆதரவினை வழங்கியிருந்தன. குறிப்பாக பிரிட்டன். பாலஸ்தீன மண்ணில் யூதர்களை குடியேற்ற உதவியது. ஐக்கிய நாடுகள் சபை மேற்குலகின் பங்களிப்போடு எல்லைகளை வரையறுத்துத் கொடுத்ததோடு, அங்கத்துவமும் வழங்கியது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சர்வதேச ரீதியாக அங்கீகாரத்தை வழங்கியது. பிரான்ஸ் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளையும் வழங்கியிருந்தன. இஸ்ரேல்தனக்கான அடையாளங்களைப்பெற மேற்குலக நாடுகளே காரணமாகியது. அந்நாடுகளின் உதவிகள் இல்லாது போனால். தேசத்திற்கான அடையாளமும். கேள்விக்குறியாகி இஸ்ரேல் என்கின்ற தேசம் கருவறையில் சிதைந்த ஒன்றாகவே இருந்திருக்கும். யூத தேசிய அரசின் உருவாக்கத்தில் மேற்குலகின் வகிபங்கு. தனித்துவமிக்க யூத தேசிய கட்டுமானத்தை சாத்தியப்படுத்தியதன் மூலம் யூதர்களின் தேசிய அரசான இஸ்ரேல் மேற்குலக நாடுகளின் பங்களிப்பினாலே உருவாக்கப்பட்டது என்ற கருதுகோளை நிறுவக்கூடியதாகவுள்ளது. எனினும் இஸ்ரேலினுடாக. மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை அபகரித்துக் கொள்ளும் நோக்கிலேயே இத்தகைய உதவிகள் மேற்குலக நாடுகளினால் வழங்கப்பட்டிருந்தன.இவ்வாய்விற்கு ஆய்வுமுறையிலாக புத்தகங்கள். சஞ்சிகைகள். பத்திரிகைகள் அங்கிகரிக்கப்பட்ட இணையம் போன்றவற்றிலிருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளன. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts, University of Jaffna, Sri Lanka Collaboration with Association of Third World Studies - South Asia Chapter en_US
dc.subject புலம்பெயர்தல் en_US
dc.subject சியோனிஸம் en_US
dc.subject தேசம் en_US
dc.subject மேற்குலகம் en_US
dc.subject குடியேற்றம் en_US
dc.title யூத தேசிய அரசின் உருவாக்கத்தில் மேற்குலகின் வகிபங்கு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record