Abstract:
சுதந்திர இலங்கைக்கான கல்விக் கொள்கையில் தொலை நோக்கு (vision) எதுவும் காணமுடியாத ஒரு வங்குரோத்து நிலை காணப்பட்டது. இருபதாம் நுற்றாண்டுக் கல்விக்கொள்கையில் இலங்கையின் ஐக்கியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் தக்க வைக்க முடியவில்லை. அது மட்டுமல்லாது இருபத்தியோராம் நூற் றாண்டின் ஆரம்பத்திலேயே முன்னைய கல்விக்கொள்கைகள் அனைத்தையுயம் மறுதலிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியது. காலனித்துவ கொள்கையை நிராகரித்த நிலைமாறி மீளவும் ஆங்கிலக்கல்வி, தனியார்கல்வி, முதலாளித்துவக்கல்வி என்ற எண்ணப்பாட்டில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. சுதந்திரத்தின் பின்பான இலங்கையின் அரசியல் வரலாற்றில் வகுக்கப்பட்ட கல்விக் கொள்கை யதார்த்தமான பின்புலங்க ளையோ உண்மையான உருவாக்கங்களையோ கொண்டிருக்க வில்லை என்ற எடுகோள் பிரதான பிரச்சினையாக முன்வைக்கப் படுகின்றது. இவ்வாறு கல்விக் கொள்கையில் அமுலாக்கம் 90 வீதம் எழுத்தறிவுடைய சமூகமாக இலங்கையரை மாற்றினாலும் பொருளாதார வளர்ச்சியிலும், தேசிய ஒருமைப்பாட்டிலும், சமூக இசைவாக்கங்களிலும், இனவிழுமியங்களிலும் ஐக்கியமான முன்னு தாரணமான நாடாக இலங்கையை காட்டமுடியாதுள்ளது. அவ் வகையான பலவீனத்திற்கு காரணியாக அமைவது கல்விக் கொள் கையில் அரசியல் தலையீடா? என்ற கேள்வி எழுவது இயல் பானதே. கல்வி இயல்பான பரிமாண வளர்ச்சியை சமூகத்தில் ஏற்படுத்தும் பொறுப்பமைவுகளைக் கொண்டது. கல்வியியல் சிந்த னைகளிலும் அதன் அமுலாக்கங்களிலும் உலகம் அப்படியான அனுபவத்தினையே பகிர்ந்து கொண்டுவருகிறது. ஏனெனில் எல்லா மனிதனும் வேறுபாடின்றி, பகையின்றி, மோதலின்றி ஒன்று சேருகின்ற மையம் கல்விக்கூடங்கள் என்பது கிரேக்க சிந்தனைக் குழுவின் கருத்தாக அமைந்திருந்தது