Abstract:
உலக வரலாறு முழுவதும் ஒரு சில தனிமனிதர்கள் தமது தலைமைத்துவம் மூலம் வரலாற்றை படைத்து விட்டுச் செல்கின்றனர். அதில் கியூப சூரியன் என கியூப நாட்டு மக்களாலும் உலக புரட்சிகர சமூகங்களாலும் நினைவில் கொள்ளப்படும் பிடல்காஸ்ரோவும் ஒருவராவார். இவருடைய தலைமைத்துவத்தின் கீழ் அமெரிக்காவிற்கு சவால்விடும் வகையில் சிறந்த நாடாக விளங்கிய இலத்தீன் அமெரிக்கா நாடான கியூப தேசத்தினை போன்று தலைமைத்துவங்களால் மூன்றாம் உலக நாடுகளினால் செயற்பட அமையாமைக்கான காரணங்களை கண்டறிவதுடன் அதன் அவசியப்பாட்டை கண்டறியும் பொருட்டு இவ்ஆய்வு அமைகிறது. இது ஒர் விபரண ரீதியான ஆய்வாக காணப்படுவதினால் இரண்டாம் நிலை தரவுகளான புத்தகங்கள், சஞ்சிகைகள், இணையத்தளம் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகையில் கியூபாவின் உறுதிப்பாட்டிற்கு பிடல்காஸ்ரோவின் தலைமைத்துவம் பங்காற்றியுள்ளது என்பதனை கருதுகோளாகக் கொண்டு கியூபாவின் விடுதலை தொடக்கம் பிடல்காஸ்ரோ எவ்வாறான சவால்களினைக் எதிர் கொண்டார் என்பதனை பிரச்சனையாகக் கொண்டு கியூபாவின் முன்னேற்றத்தில் அவரின் தலைமைத்துவம் வெற்றிக்கான சாத்தியப்பாட்டினைக் கொண்டிருந்தது என்பதனை நோக்கமாக கொண்டது.