DSpace Repository

போருக்குப் பின்பான இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை - சீன உறவு : ஒரு நோக்கு

Show simple item record

dc.contributor.author Ganeshalingam, K.T.
dc.date.accessioned 2023-02-10T09:37:20Z
dc.date.available 2023-02-10T09:37:20Z
dc.date.issued 2011
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9070
dc.description.abstract 2009ஆம் முன்னெடுப்பில் ஆண்டு ஏப்ரலுக்கு பின்னான இலங்கையின் கொள்கை முன்னெடுப்பில் பொருளாதார அபிவிருத்தி முக்கிய அம்சமாக மாறியுள்ளது. இனப்பிரச்சினைக்கான ஆயுதப்போராட்டம் இலங்கையின் அரசியல்-பொருளாதார விருத்தியை பாதித்திருந்தது. இதனை மீள் உருவாக்கம் செய்வதற்கான உபாயத்துடன் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை முன்னெடுப்புகள் பொருளாதார சுபீட்சத்திற்கான வேகத்தை முன்னிறுத்தியது. கடந்தகால அரசாங்கங்கள் பொருளாதார கொள்கை முன்னெடுப்பினை முதலாளித்தவ சார்பிலும் சோஸலிஸம் கலந்த சமூக முதலாளித்துவ சார்புக்குள்ளும் வகைப்படுத்தி இயங்கின. உலகமும் மேற்கு, கிழக்கு என்ற வரைபுக்குள் இயங்கும் விதியையும் கொண்டதாக அமைந்தது. புதிய உலக ஒழுங்கு உருவான பிற்பாடு நிகழ்ந்த உலகளாவிய பதிவுகள் உலகமயமான கொள்கையின் தீவிரத்தினை எட்டியது. இதனால் இடது வலது என்ற சித்தாந்தத்தை கடந்து முழுஉலகத்திற்குமான திரட்சியில் அரசுகளின் போட்டித்தன்மைக்குள் உலக இயக்கம் மீளவும் வடிவமெடுத்துக் கொண்டது. சீனாவின் பொருளாதார செழிப்பும் அதற்கான பாய்ச்சலும் புதிய உலக சக்தியாக பரிமாணமெடுக்க உதவிவருகிறது. இலங்கை அரசாங்கம் மேற்குடனான உறவுமுறையில் ஏற்பட்ட சரிவையும் நெருக்கடியையும் கருத்தில் கொண்டு சீனாவுடனான அல்லது கிழக்குலகத்துடனான உறவை பலப்படுத்தி வருகிறது. இதில் சீன - இலங்கை நட்புறவு பொருளாதார சுபீட்சத்திற்கான நடவடிக்கையாக அமையும் என்ற ஆய்வுப் பொருள் முதன்மைப்படுத்தப்பட்டு பரிசீலிக்கப்படுகிறது. இவ்வாய்வின் பிரதான முறையியலுக்குள் தத்துவார்த்த அணுகுமுறையினையும், அதனடிப்படையில் புள்ளிவிபரவியலையும் உள்ளடக்கி இரண்டாம் நிலைத்தரவுகளின் பதிவுகளை முதன்மைப்படுத்தி ஆராயமுயலுகின்றது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உறவின் முக்கியத்துவம் சமகால உலக ஒழுங்கில் அளவீடு செய்வதன் மூலம் இதன் மதிப்பீட்டை முழுமைப்படுத்தலும், அதேநேரம் பிறபிராந்தியங்களுடனான உறவில் காணப்படும் நெருக்கடியும் சவாலும் தந்திரோபாயமாக கையாள முயலும் போக்கும் பொருளாதார சுபீட்சமும் ஒரே இடத்தில் மையப்படுத்த முடியுமா என்பதை தெளிவுபடுத்துவதாக உள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher South Eastern University of Sri Lanka, Oluvil en_US
dc.subject சமூக முதலாளித்துவம் en_US
dc.subject மேற்கு-கிழக்கு en_US
dc.subject பொருளாதார சுபீட்சம் en_US
dc.subject தந்திரோபாயம் en_US
dc.title போருக்குப் பின்பான இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை - சீன உறவு : ஒரு நோக்கு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record