DSpace Repository

சீனாவின் ஆழ்கடல் அதிகாரக் கொள்கை இந்து சமுத்திரப் பிராந்தியம் பற்றிய ஓர் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Ganeshalingam, K.T.
dc.date.accessioned 2023-02-10T09:30:30Z
dc.date.available 2023-02-10T09:30:30Z
dc.date.issued 2002
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9068
dc.description.abstract ஆசியக் கண்டத்தில் பிரதான அதிகார அரசுகளாக மக்கள் சீனக் குடியரசும், இந்தியக் குடியரசும் காணப்பட்டபோதும் ஐக்கிய அமெரிக்காவின் செல்வாக்கும் கணிசமான பங்கைப் பெற்றுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக பல்வேறுபட்ட குடிறேயற்றவாத அரசுகளும், வல்லரசுகளும் ஆசியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான போராட்டத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியம் முக்கிய தளமாக அமைந்திருந்தது. இந்து சமுத்திரத்தினைக் கட்டுப்படுத்தும் நிலை எழுச்சியடையும் போதே ஆசியாவைக் கட்டுப்படுத்த முடியுமென்ற நிலை ஏற்பட்டிருந்தது. இரண்டாம் உலக யுத்தம் வரையும் ஐக்கிய இராச்சியத்தினால் வெற்றிகரமாகத் தக்கவைத்திருந்த ஆசியாவும்-இந்து சமுத்திரப் பிராந்தியமும் போருக்குப் பிந்திய இருதுருவ அரசியல் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் யூனியனுக்கும் உரியதாக மாறியது. ஆனால் பனிப்போர் காலம் முழுவதும் இரு வல்லரசுகளின் அதிகாரப் போட்டிக்கான சூழல் இந்து ஈமுத்திரப் பிராந்தியத்தினையும் அதிகாரச் சமநிலைக்குள் உட்படுத்தியிருந்தது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி சர்வதேச அரசியல் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியது போன்று இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஐக்கிய அமெரிக்காவின் விஸ்தரிப்புவாதம் உலகம் முழுவதும் பரவும் நிலை கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப்பகுதியில் நிகழ்ந்து வருவதனாலும், வேறும் பல பிராந்தியங்களில் அமெரிக்காவிற்கு எதிராக எழுந்துள்ள போராட்டங்களாலும் சர்வதேச அரசியலில் போட்டித் தன்மை, தனிவல்லரசு நிலையினால் குறைந்துள்ளதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஐக்கிய அமெரிக்காவின் கவனம் கடந்த பனிப்போர் காலத்தைவிட மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியா, சீனா பிராந்தியத்தில் எழுச்சியடைகின்ற போதிலும் சீனா இப்பிராந்திய அரசுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் அரசியல்-பொருளாதார-இராணுவ உறவினாலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள சில இராணுவத் தளங்களையும் சீனாவுக்குரியதாக மாற்றிக் கொள்ளும் போக்கும் அதன் விஸ்தரிப்புக் கொள்கையை தெளிவாகக் காட்டுகின்றது en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Graduate Studies University of Jaffna en_US
dc.title சீனாவின் ஆழ்கடல் அதிகாரக் கொள்கை இந்து சமுத்திரப் பிராந்தியம் பற்றிய ஓர் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record