dc.description.abstract |
இன்றைய உலக நியமத்தின் அரசுகளின் உயிர்வாழ்வு வெளியுறவுக் கொள்கை சார்ந்தது. வெளியுறவுக் கொள்கையானது அரசுகளின் தேசிய நலன்சார்ந்தது. அரசுகளின் தேசிய நலனுக்குள் பொருளாதாரம் வலிமையான சுட்டியாக திகழ்கிறது. பொருளாதார வலிமை அரசியல், இராணுவ உபாயங்களால் சுற்றிவளைக்கப்பட்டு நிலைநிறுத்தப்படும் பேண்தகு அபிவிருத்திக்கு வழிவகுக்கின்றது. எனவே தான் வெளியுறவுக் கொள்கை ஒவ்வொரு அரசுகளின் அரசியல் பிரச்சினைகளாலும், பொருளாதார தேவைகளாலும், உள்நாட்டுப் பிரச்சினையின் தீர்விற்கானதாகவும், பிராந்திய, சர்வதேச அடிப்படையின் பாதுகாப்பிற்கான தந்திரமாகவும் கருதப்படுகின்றது.
இலங்கையின் நீண்டகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்குவந்ததை அடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சவால்கள் எழுச்சியடைய ஆரம்பித்துள்ளது. அதில் மிக மிக முக்கியத்துவமும், தனித்துவமும் மிக்கதுமாக வெளியுறவுக் கொள்கை விளங்குகின்றது. இலங்கையின் அமைவிடம் பொறுத்தும் உலக ஒழுங்கில் ஏற்பட்டுள்ள புதிய வல்லரசுகளின் வரவினை அடுத்தும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை என்றுமில்லாத முக்கியத்துவத்தினை பெற்றுள்ளது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் 1. சீனசார்பு போக்கும் 2. இந்திய முரண்கலந்த சார்புப் போக்கும் 3. மேற்குடனான எதிர்ப்புணர்வுப் போக்கும் ஆய்வுப் பிரச்சினையாக கொள்ளப்படுகிறது.
இவ்வகை முரண்பாட்டை இனங்காண்பது மட்டுமல்லாது அதனால் ஏற்படவுள்ள மனிதஉரிமை சார்ந்தும் - பொருளாதாரம் சார்ந்தும் எழுந்துள்ள அகபுற நெருக்கடிகளை இரண்டாம் நிலைத்தரவுகளுக்கூடாக ஆராயமுயல்கின்றது. குறிப்பாக வெளியுறவுக் கொள்கைசார் எண்ணக்கருவாக்கத்தின் முன்மொழிவுகளை பலவீனப்படுத்தும் உபாயங்களின் விளைவுகளால் இலங்கையின் அபிவிருத்திக்கு ஏற்படப்போகும் ஆபத்தின் எதிர்காலம் தரிசனமாக இவ்வாய்வு கண்டறிய முடியுமென கருதுகிறது. இதனால் எழும் நடைமுறைசார் நெருக்கடியை தீர்க்க முயன்றுள்ளது. |
en_US |