dc.description.abstract |
ஆசியாவின் தென் பகுதியிலுள்ள தற்கால இந்தியக் குடியரசு, பாகிஸ்தான், வங்காள தேசம், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலைதீவுகள் ஆகியவையே தென்னாசிய நாடுகளாகும். புராதன காலந்தொட்டு மனித நாகரிகம் தொடர்ந்து வளர்ந்து வந்த பிராந்தியங்களில் தென்னாசிய நிலப்பரப்பு மிகவும் முக்கியமானதாகும். இப் பிரதேசங்களில் சிறந்த நாகரிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்பிரதேசங்களில் நாகரிகம் வளர்ச்சியடைய அரசியல், நிருவாகம், சட்டம், சமூகம், பொருளாதாரம், கலைகள் என்பன குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டன. கலைகளில் கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் முதலிய குழைமைகக் கலைகளும் (Plastic Arts), இசை, நடனம் நாடகம் முதலிய அவைக்காற்றுக் கலைகளும் (Performing Arts) குறிப்பிடத்தக்கன. ஆரம்ப காலத்தில் கலைகளை உள்ளடக்கிய கூட்டுக்கலைக்களாக நடனம் தென்னாசியாவில் வளர்ந்தது. தென்னாசியாவின் வெவ்வேறுபட்ட பகுதிகளிலும் பல்வேறுபட்ட கலைகள் இன்று வரையும் தொடர்ந்து நிலவுகின்றன. இவற்றில் காலப்போக்கிலே செம்மைப்படுத்தப்பட்ட சாஸ்தரீய நடனங்களாகி அவ்வப் பகுதிகளுக்குச் சிறப்பானவைகளாக இந்தியக் குடியரசிலே விளங்கியபோது தமிழ்நாட்டிற்குரிய பரதநாட்டியம் முக்கியத்துவ மான இடத்தினைப் பெறுகின்றது. நடனங்கள் அனைத்திற்குமான பொதுவான அம்சங்களும், சிறப்பான அம்சங்களும் சாஸ்திரிய நடன மரபில் உள்ளன. இச்சாஸ்திரீய நடனங்கள் அனைத்திற்கும் பொதுவாக நாட்டிய சாஸ்திரமே முதல் நூலாகக் கொள்ளப்படுகின்றது. இந்தியாவுக்கு வெளியேயுள்ள நாடுகளிலும் நாட்டிய சாஸ்திர மரபு பரவியுள்ளது. |
en_US |