Abstract:
மருத்துவம் எனும் தொழிலைச் செய்வதற்கு மருத்துவ அறிவு முக்கியமானதாகும். இதற்கு ஆதாரமாக இருப்பது மருத்துவ நூல்களாகும். யாழ்ப்பாணத்தில் தமிழ் மருத்துவம் என்று கூறும்போது சித்தமருத்துவத்தையே குறிக்கிறது. இம்மருத்துவம் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்ற காலமெனப் பரராசசேகரம் காலத்தை அளவிடலாம். இக்காலத்தில் 12000 பாடல்கள் உடைய பரராசசேகரம் எனும் சுவடி வைத்திய நூல் எழுந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். இவ்வாய்வில் அச்சு வடிவில் எழுந்த மருத்துநூல்கள் அவற்றின் நோக்கங்கள் இந்நூல்களினால் மருத்துவத்தின் நிலமை எப்படி இருந்தது? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.
சித்தர்கள் காலத்திலே அச்சு இயந்திரங்கள் இல்லாத நிலையில் ஏட்டுச்சுவடிகளே காணப்பட்டன. இக்காலப்பகுதியில் மன்னஞ் செய்து நினைவில் நிறுத்துவதற்கு எளிமையான முறையில் பாடல்வடிவிலே நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.
கி.பி. 12-15ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தமிழ் மன்னர் காலப்பகுதியில் மன்னன் நயனவிதி போன்ற நூல்கள் தோற்றம் பெற்றன.
யாழ்ப்பாணத்தரசர்களால் தமிழ் எழுதிப்பாதுகாத்த வைத்தியச்சுவடிகள் சித்த மருத்துவ வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
மன்னர்களின் வீழ்ச்சியுடன் வைத்தியஏடுகள் தனிப்பட்ட வைத்தியர்களிடம் அவர்களின் சொத்தாக வைத்தியர்களைச் சிறந்த வைத்தியர்களாகவும் 1929-1934 மாற்றியமைத்தன. ஏடுகள் பாதுகாக்கப்பட்டு நூலுருப்பெற்றன.