DSpace Repository

நீரழிவு நோயாளியின் கால் விரணமாற்றுவதில் குப்பிளாய் எண்ணெயின் செயற்திறனை மதிப்பிடல் - நோயாளி அறிக்கை

Show simple item record

dc.contributor.author Sritharan, G.
dc.contributor.author Anpuchelvy, S.
dc.date.accessioned 2023-02-02T05:08:25Z
dc.date.available 2023-02-02T05:08:25Z
dc.date.issued 2016
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8994
dc.description.abstract பொதுவாக நீரழிவு நோயாளிகளில் 25% கால் பாதிக்கப்படுகின்றனர். நீரழிவு நோயின் பாதிப்புகளாக நரம்பு மண்டலங்களின் செயற்பாடு பாதிக்கப்படுவதால் நாடிகளில் இரத்தவோட்டம் பாதிக்கப்பட்டு இதன் விளைவாக காலில் விரணங்கள் ஏற்படுகின்றது. இழையங்களும் பாதிப்படைந்து இந்த விரணங்கள் இலகுவில் ஆறுவதில்லை. இதன்பால் பாதம் அல்லது காலின் ஒரு பகுதி, என்புகள் சிகிச்சைக்காக கூட அகற்றப்படுகின்றன. 65 வயதுள்ள ஆண் நோயாளி ஆண் நோயாளி நீண்டகாலமாக நீரழிவு நோயுக்குள்ளானவர். அவரது இடது காலிலுள்ள பெருவிரலிடையில் விரணம் ஏற்பட்டு மேலைத்தேய அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அந்த விரணமானது பல மாதங்களாக குணமாகாத நிலையில் அவருக்கு சத்திர சிசிச்சை நிபுணரினால் பெருவிரலை அகற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு அவர் சித்த சிகிச்சை பெறுவதற்காக ஹேர்பல் கெல்த் கெயார் சென்ரருக்கு வருகை தந்தார். அவருடைய எண்ணெய் வெளிப்பிரயோகமாக ஒவ்வொரு நாளும் போடப்பட்டது. மிகவும் கால் புண்ணுக்கு குப்பிளாய் தொற்று நீக்கிய நிலையில் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. நான்கு மாதச் சிகிச்சையில் அவருடைய புண் புகைப்படம், கண்களால் புண்களை அவதானித்தல் ஆகியவற்றின் மூலமும் பூரண குணமாகியது. இச்சிகிச்சையில் புண்ணின் வேதனை, நிறமாற்றம், மணம், சீழ்த்தன்மை, புதிதாக தோல் உருவாதல், புண்ணின் அளவு என்பன அளவுகோல்களாக அளவிட்டு ஆய்வு மதிப்பீடு செய்யப்பட்டது. ஆய்விலே குப்பிளாய் எண்ணெயானது அகற்றுவதிலும், அதில் புழுக்கள் உருவாவதையும் தடுக்கவல்லது. இது நீரழிவு நோயில் சிறப்பான செய்கை செய்கிறது. சீழ்கள் விரணமாற்றுவதில் இலையான் வந்திருந்து விரணத்திலுள்ள சீழ்களை அதன் மூலம் இலகுவாக அகற்றப்படுவதால் மணம் விரைவாக குப்பிளாய் ஆற்றலைக் எண்ணெய் தசைவளர்ச்சியை கொண்டிருப்பதால் விரைவாக அகன்று விடுகிறது. விரைவாக உண்டாக்கும் விரணமாறுகிறது. குப்பிளாய் இலைச்சாறு பக்ரீரியாக்களின் தாக்கத்திற்கு எதிராக நுண்ணுயிர்க்கொல்லி தன்மையை கொண்டிருப்பது அறியப்பட்டுள்ளது. குப்பிளாய் எண்ணெயானது நீரழிவு நோயாளிகளின் கால் விரணங்களை விரைவாக குணமாக்குவதில் சிறப்பான பங்கு வகிக்கிறது. en_US
dc.language.iso en en_US
dc.publisher Eastern University, Sri Lanka en_US
dc.subject குப்பிளாய் எண்ணெய் en_US
dc.subject விரணம் en_US
dc.title நீரழிவு நோயாளியின் கால் விரணமாற்றுவதில் குப்பிளாய் எண்ணெயின் செயற்திறனை மதிப்பிடல் - நோயாளி அறிக்கை en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record