DSpace Repository

வடஇலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை ஈமச்சின்னங்கள்

Show simple item record

dc.contributor.author Sajitharan, S.
dc.date.accessioned 2023-01-27T05:10:45Z
dc.date.available 2023-01-27T05:10:45Z
dc.date.issued 2020
dc.identifier.issn 25823998
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8922
dc.description.abstract ஆசியாவில் நீண்ட பாரம்பரிய பாரம்பரிய வரலாற்று வரலாற்று மரபு மற்றும் பல்லினப்பண்பாட்டு கொண்ட நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதி தற்போதைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்களைக் குறிப்பதாகும். பொதுவாக அநுராதபுரத்திற்கு வடக்கே அமைந்துள்ள வடஇலங்கை பண்டு தொட்டு தனியொரு பிராந்தியமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வடஇலங்கைக்கு இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத பாரம்பரிய வரலாறு இருப்பதனை வரலாற்று மூலங்கள் மட்டுமன்றி இன்றுவரை நிலைத்து நிற்;கும் தொல்லியல் பண்பாட்டுச் சின்னங்கள் மற்றும் இதுவரை இடம்பெற்ற தொல்லியலாய்வுகள் போன்றனவும் உறுதிப்படுத்துகின்றன. இத்தொல்லியல் ஆய்வுகளில் இலங்கையின் வரலாற்றுதய காலமாகிய பெருங்கற்காலப் பண்பாடு பற்றிய ஆய்வுகள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தவையாகும். தமிழகத்தினதும், இலங்கையினதும் அரசியல், பொருளாதார, சமூக, சமய பண்பாட்டம்சங்களின் தொடக்க வாயிலாக பெருங்கற்காலப் பண்பாடு (Megalithic Culture) அமைகின்றது. பெரிய கற்களினை பயன்படுத்தி தொழினுட்ப திறன் வாய்ந்ததாக ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டதன் காரணமாகவே இப்பண்பாடு பெருங்கற்காலம் பெயர் பெறுகின்றது. இப்பண்பாட்டம்சங்கள் செழிப்படைந்திருந்த இடங்களில் வடஇலங்கையும் ஒன்று என்பதனை இங்கு பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியலாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதில் குறிப்பாக அண்மையில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களான மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரை மற்றும் வவுனியா மாவட்டத்தில் கொங்குராயன்மலை என்பன முக்கியம் முக்கியம் வாய்ந்தவையாகும். en_US
dc.language.iso en en_US
dc.publisher அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் en_US
dc.subject ஈமச்சின்னங்கள் en_US
dc.subject வடஇலங்கை en_US
dc.subject பெருங்கற்காலப் பண்பாடு en_US
dc.subject தொல்லியல்ஆய்வுகள் en_US
dc.title வடஇலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை ஈமச்சின்னங்கள் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record