Abstract:
பண்டைத் தமிழர்களின் மிகத் தொன்மையான இலக்கியங்களாக பதினென் மேற்கணக்கு, பதினென் கீழ்கணக்கு, ஐம்பெரும் இலக்கியங்கள், ஐந்சிறுகாப்பியங்கள் என்பன அமைகின்றன. இவற்றில் திருக்குறள் பெரிதும் எல்லோருக்கும் எக்காலத்திற்கும் பொருத்தமுடைய உலக பொதுநூலாகும். இதன் காரணமாகவே திருக்குறள் முப்பத்து நான்கிற்கு (34) மேற்பட்ட மறு பெயர்களை கொண்டு சிறப்புப் பெற்றிருக்கின்றது. ( சஞ்சீவி. ந. 1981). நடுகற்கள் பற்றிய தொல்லியல் ஆதாரங்களினை திருக்குறள் உட்பட்ட பழந்தமிழ் இலக்கியங்களின் பிண்ணயில் ஆராய்வதனூடாக அக்கால அரசியல் பொருளாதார சமூக, சமய, பண்பாட்டு நம்பிக்கைகளை கண்டறிவதாகவும், நடுகற்கள் அமைக்கும் மரபு திருக்குறள் தோற்றம் பெற்ற காலத்தினைத் தொடர்ந்து பெற்றிருந்த செல்வாக்கினையும், அதன் வளர்ச்சி நிலையினையும் ஆராய்வதாகவும், அதனூடாக ஒரு சமுதாய தொடர்ச்சியினை வெளிப்படுத்துவதாகவும் இல்வாய்வு அமைகின்றது.