DSpace Repository

தமிழர் பண்பாட்டு வாழ்வியலில் ஆவுரஞ்சிக் கற்கள் மற்றும் சுமைதாங்கிக் கற்கள்

Show simple item record

dc.contributor.author Sajitharan, S.
dc.date.accessioned 2023-01-19T07:50:58Z
dc.date.available 2023-01-19T07:50:58Z
dc.date.issued 2012
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8892
dc.description.abstract இலங்கை தொல்லியல் மரபுரிமைச் சட்ட விதியின்படி, இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் மேற்பட்ட வரலாற்றுப் பெறுமதியுடைய வாழ்விடங்கள், வழிபாட்டிடங்கள், நிர்வாக மையங்கள், பிற கட்டடங்கள் என்பன மரபுரிமைச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்தலாம் எனக் கூறப்படுகின்றது. இவ்வரிசையில் குடாநாட்டில் பாவனையில் இருந்த, இருக்கின்ற வீதியோரங்களில் காணப்படும் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்களான ஆவுரஞ்சிக்கல், சுமைதாங்கி, மடம் என்பனவும் சிறப்பாக குறிப்பிடத்தக்கன. பொருளாதார, சமூக, பண்பாட்டுத் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சி என்பவற்றின் காரணமாக ஆவுரஞ்சிக்கல், சுமைதாங்கி, மடம் போன்ற மரபுரிமைச் சின்னங்கள் இன்றைய மக்கள் வாழ்வியலிலிருந்து அருகி வருவதனை அவதானிக்க முடிகின்றது. இவற்றின் வரலாற்றுத் தொன்மையும், அவை ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தையும் ஆராய்வதே இவ்வாய்வின் கருப்பொருளாகும். யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கு 2500 ஆண்டுகளுக்குக் குறையாத தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு. இப்பிராந்தியம் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெறுவதற்கு முன்னர் நாகதீபம், நாகநாடு என்ற பெயரால் தனித்துவமான பிராந்தியமாக வரலாற்று மூலங்களில் அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இருப்பினும், ஐரோப்பியர் ஆட்சிக்கு முன்பிருந்த பலமரபுரிமைச் சின்னங்கள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையால் அழிவடைந்து போயுள்ளன. ஆலய இன்று, யாழ்ப்பாணக் கோட்டை, அகழ்வாய்வில் கிடைக்கும் அழிபாடுகள், பிற கட்டட எச்சங்கள் ஆகியன எவ்வாறு போர்த்துக்கேயர் வருகைக்கு முன்னர் குடாநாட்டின் பண்பாட்டு மரபுரிமை இருந்தது என்பதற்கு சிறந்த சான்றுகளாகும். ஆயினும், அவர்களது கலையழிவுக் கொள்கையில் இருந்து தப்பிய சில சின்னங்களாக மடங்கள், ஆவுரஞ்சிக்கற்கள், சுமைதாங்கிகள் இன்றும் குடாநாட்டில் காணப்படுகின்றன. இவற்றுள் பல பிற்காலத்தில் தோன்றியிருந்தாலும் அவற்றிற்கு எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு குறையாத வரலாற்று மரபு உண்டு என்பதை பழந்தமிழ் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. en_US
dc.language.iso other en_US
dc.publisher கலைக்கேசரி,எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன் - பிரைவேட்) லிமிட்டெட் en_US
dc.title தமிழர் பண்பாட்டு வாழ்வியலில் ஆவுரஞ்சிக் கற்கள் மற்றும் சுமைதாங்கிக் கற்கள் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record