Abstract:
தமிழின் தொன்மைச் சிறப்பினை நிலை நிறுத்துவதில் திருக்குறள் போன்ற இலக்கியங்களுக்கு பெரும்பங்குண்டு. திருக்குறளின் சிறப்பு காரணமாகவே பல மொழி, பல இனத்தவர்களிடையேயும் இற்றைவரை செல்வாக்கு செலுத்தி வருகின்றது. மிகச்சிறந்த உதாரணமாக பிரித்தானியர் ஆட்சிக்கால தமிழகத்தில் திருக்குறள் பெற்ற செல்வாக்கினைக் குறிப்பிட முடியும்.
இந்தியாவில் பிரித்தானியர்களால் திருவள்ளுவர் திருவுருவம் பொறித்த தங்கநாணயங்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன், பிரித்தானிய உயர் அதிகாரிகளில் ஒருவராகிய ப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் என்பவர் தமிழகத்தில் தன்னால் நிறைவேற்றப்பட்ட பணி பொருட்டு உருவாக்கப்பட்ட கல்வெட்டெயின்றில் திருக்குறளை (குறள் 737) மேற்கோள் காட்டியிருந்தார். அத்துடன் அவருடைய கல்லறை வாசகம் கூட திருக்குறளின் பெருமையை தாங்கியுள்ளதெனலாம்.