DSpace Repository

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பண்பாட்டுச் சுற்றுலாவுக்குரிய தொல்லியல் மையங்கள் -எதிர்கால நோக்கு

Show simple item record

dc.contributor.author Sajitharan, S.
dc.date.accessioned 2023-01-17T07:35:45Z
dc.date.available 2023-01-17T07:35:45Z
dc.date.issued 2012
dc.identifier.issn 2279-1922
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8886
dc.description.abstract தனக்கென தனித்துவமான பாரம்பரிய வரலாறு கொண்ட பிராந்தியங்களில் ஒன்றாக யாழ்குடாநாடு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதை வரலாற்று மூலங்கள் மட்டுமன்றி இன்றுவரை நிலைத்து நிற்கும் தொல்லியல் பண்பாட்டு சின்னங்களும் உறுதிப்படுத்துகின்றன. யாழ் குடாநாடானது வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், அயலில் உள்ள தீவுக்கூட்டங்கள் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி நிற்கின்றது. யாழ் குடாநாட்டிற்கு இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்குக் குறையாத தொன்மையான தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதனை இதுவரை காலமும் இங்கு இடம்பெற்ற தொல்லியலாய்வுகள் எடுத்தியம்புகின்றன. எனினும் ஐரோப்பியர் ஆட்சிக்கு முன்பிருந்த தொல்லியல் பண்பாட்டுச் சின்னங்கள் அவர்களது இறுக்கமான மதநடவடிக்கைகளினாலும், கலையழிவுக் கொள்கைகளினாலும் முற்றாக அழிக்கப்பட்டு அல்லது சிதைக்கப்பட்டுவிட்டன என்றே கூறலாம். தொல்லியல் பண்பாட்டுச் சின்னங்கள் அல்லது மரபுரிமைச் சின்னங்கள் என்பது எமது சமுதாயத்தின் கடந்த காலத்தைப் பிரதிபலிக்கும் திருப்பி பெற முடியாதான அரும்பெரும் பொக்கிசங்களாகும். இவை எமது சமுதாயத்தின் தொடக்கத்தையும் அடையாளத் தன்மையையும் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கின்றன. விலைமதிக்க முடியாத சொத்துக்களான இத் தொல்லியல் பண்பாட்டுச் சின்னங்களை உரிய முறையில் பாதுகாப்பதன் மூலமாக எதிர்கால சந்ததியினருக்கு அவற்றை உரிய முறையில் கையளிக்க முடியும். இது ஒவ்வொரு பிரசையின் கடமைப்பாடுமாகும். யாழ்குடாநாட்டின் பெறுமதிமிக்க இத் தொல்லியல் பண்பாட்டுச் சின்னங்களினைப் பொதுவாக ஜரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட கால பண்பாட்டுச் சின்னங்கள், ஜரோப்பியர் கால பண்பாட்டுச் சின்னங்கள் என இருவகைப்படுத்தலாம். ஜரோப்பியருக்கு முற்பட்ட கால தொல்லியல் பண்பாட்டுச் சின்னங்களாக கந்தரோடை எச்சங்கள், நெடுந்தீவு இந்து பௌத்த சின்னங்கள், பூநகரி-மண்ணித்தலை இந்துக்கோயில், மாவிட்டபுரம் இந்துக்கோயில், நகுலேஸ்வரம் இந்துக் கோயில், மடம் மற்றும் யாழ்ப்பாணத்தரசர்கள் கால சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி, மந்திரிமனை போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஐரோப்பியர் கால நினைவுச்சின்னங்களாக அவர்கள் கால கோட்டைகள், ஆலயங்கள், நிர்வாக மையங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் யாழ்ப்பாணம், நெடுந்தீவு ஓல்லாந்தக் கோட்டைகள், மணற்காடு, சங்கானை, சக்கோட்டை, அச்சுவேலி, நெடுந்தீவு ஓல்லாந்த தேவாலயங்கள் மற்றும் ஏனைய நிர்வாக மையங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கன. இன்று வரை நிலைத்து நின்று யாழ்ப்பாணக்குடா நாட்டின் பாரம்பரிய வரலாற்றினை அல்லது மரபுரிமையைப் பிரதிபலிக்கும் பெறுமதிமிக்க தொல்லியல் பண்பாட்டுச் சின்னங்கள் உரிய முறையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் யாழ் குடாநாட்டின் தனித்துவமான பண்பாட்டினை, பராம்பரியத்தினை பிரதிபலிக்கும் மரபுரிமைச் சின்னங்களினை அல்லது மையங்களினை அடிப்படையாகக் கொண்டு இப்பிரதேசத்தில் கலாசார சுற்றுலா மேற்கொள்வதற்குப் பொருத்தமான தொல்லியல் மையங்களை அடையாளப்படுத்துவதும் ஆவணப்படுத்துவதும் காலத்தின் தேவையாகும். ஏனெனில் ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியானது கணிசமான பங்களிப்பை வழங்குகின்றது. ஆகவே அதற்கு ஏற்றவகையில் யாழ்ப்பாணத்தில் காணப்படும் தொல்லியல் மரபுரிமைச் சின்னங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதன் மூலமாகவும் தொல்லியல் பண்பாட்டு சின்னங்களின் அல்லது மையங்களின் பாதுகாப்பு கோட்பாட்டில் சர்வதேச சாசனங்கள் (International Charter for the Conservation and Restoration of Monuments and Sites) குறிப்பிடும் வரைவிலக்கணங்களுக்கு அமைவாகவும் யாழ்குடாநாட்டின் தொல்லியல் சுற்றுலா மையங்களை பல்வேறு உரிய முறையில் பாதுகாத்து, பண்பாட்டுச் மையங்களாக உருவாக்குவக்குதன் மூலம் யாழ்குடாநாடனது அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்ளும். இவ் மரபுரிமைச் சின்னங்கள் எதிர்கால திட்டமிடல்களின் அடிப்படையில் பாதுகாக்கப்படும் போது இப் பண்பாட்டு சின்னங்களின் பாதுகாப்பில் யாழ்குடாநாட்டின் என்பதில் எந்தவித சந்தேகமில்லை. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title யாழ்ப்பாணக் குடாநாட்டில் பண்பாட்டுச் சுற்றுலாவுக்குரிய தொல்லியல் மையங்கள் -எதிர்கால நோக்கு en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record