DSpace Repository

தொல்லியல் மரபுரிமை சின்னங்களைப் பாதுகாப்பதில் எதிர்ப்படும் சவால்கள்

Show simple item record

dc.contributor.author Sajitharan, S.
dc.date.accessioned 2023-01-17T07:17:13Z
dc.date.available 2023-01-17T07:17:13Z
dc.date.issued 2017
dc.identifier.issn 2478-1061
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8883
dc.description.abstract தொல்லியல் மரபுரிமை என்பது பல்லினப் பண்பாடு கொண்ட மக்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு இனமக்களினது தொன்மையான, தொடர்ச்சியான வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்தி காட்டும் நம்பகரமான ஆதாரமாகப் பார்க்கப்படுகின்றது. பண்டு தொட்டு இலங்கை வரலாற்று மூலங்களில் தனியொரு பிராந்தியமாக கூறப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு தொன்மையான தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதை தொல்லியல் மரபுரிமைச் சின்னங்கள் எடுத்துக் காட்டுகின்றன.அவை தொல்லியல், வரலாற்று, சமூக, சமய, விஞ்ஞான, தொழிநுட்ப, கட்டட, கலை பெறுமானங்களை பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. யாழ்ப்பாண தொல்லியல் மரபுரிமைகளானது ஆதியிரும்புக் காலத்தில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள்,ஐரோப்பியர் வருகைக்கு முன்பிருந்து மக்கள் ஒன்று கூடும் இடங்களில் அமைக்கப்பட்ட மரபுரிமைச் சின்னங்கள், இந்து, பௌத்த மதம் சார்ந்த மரபுரிமைச் சின்னங்கள்,அரச மரபு சார்ந்த மரபுரிமைச் சின்னங்கள், ஐரோப்பியர் கால மரபுரிமைச் சின்னங்கள்என ஐந்து வகையாக பார்க்கப்படுகின்றது.இவ் மரபுரிமைச் சின்னங்களில் பலவும் ஐரோப்பியரது நடவடிக்கை, கடந்த உள்நாட்டு யுத்த சூழ்நிலை, இயற்கை அழிவுகள், மக்களிடையே மரபுரிமைச்சின்னங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வின்மை போன்ற பல்வேறு காரணங்களால் காலத்துக்கு காலம் அழிவுக்குட்பட்டிருந்தது. இவ் அழிவிலிருந்து எஞ்சிய மரபுரிமைச் சின்னங்களின் பாதுகாப்பில் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சவால்களினை இனங்காணுதல், அவற்றின் பாதுகாப்பிற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கங்களாகும். இவ் ஆய்வு நோக்கங்களினை நிறைவு செய்யும் பொருட்டு களவாய்வினூடாக மரபுரிமைச் சின்னங்கள் நேரடி அவதானிப்பிற்கு உட்படுத்தப்பட்டே அவற்றின் சிதைவிற்கான காரணங்கள் அடையாளப்படுத் தப்பட்டதுடன் பாதுகாப்பு வழிமுறைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இலங்கை தொல்லியற் சட்டம் (Antiquities Amendment Act No. 24 of 1988) இன் பிரகாரம் இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல், வரலாற்றுப் பெறுமதியுடைய காணிகள், கட்டிடங்கள், மரங்கள் போன்ற யாவற்றையும் மரபுரிமைச் சின்னங்களாக பிரகட -னப்படுத்தி வருகின்றது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட மரபுரிமைச் சின்னங்கள் மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட, அடையாளப்படு -த்தப்படாத மரபுரிமைச் சின்னங்கள் போன்றன இயற்கை, சமூகம், நிர்வாகம், வளங்கள்சார்ந்த பிரச்சனைகளால் அழிவுக்குட்பட்டு வருவதனை அவதானிக்க முடிவதால் அவற்றுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை சிறந்த திட்டமிடலின் அடிப்படையில் கையாளப்பட வேண்டும் என்பதனையே இவ்வாய்வு எடுத்துரைக்கின்றன. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject மரபுரிமைச் சின்னங்கள் en_US
dc.subject நினைவுச் சின்னங்கள் en_US
dc.subject மரபுரிமை முகாமைத்துவம் en_US
dc.subject மரபுரிமைப் பெறுமானங்கள் en_US
dc.title தொல்லியல் மரபுரிமை சின்னங்களைப் பாதுகாப்பதில் எதிர்ப்படும் சவால்கள் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record