Abstract:
உலகில் ஒவ்n;வாரு நாடுகளும் தமது கலாச்சாரங்களையும், பண்பாட்டு தொன்மையையும், தனித்துவத்தையும் நிலைநாட்டுவதில் முனைப்புடன் செயற்படுகின்றன. தமது பண்பாட்டுச் சின்னங்களை கண்டறிந்து அவற்றை உலகிற்கு அறியச்செய்வதுடன் தமது பழைமையும் இருப்பையும் உறுதிப்படுத்த முனைப்புடன் செயற்படுகின்றன. இவ்வாறு நீண்ட வரலாறு கொண்ட நாடுதான் இலங்கை. இங்கு பல்வேறு இனக்குழுக்கள் வாழ்கின்ற போதிலும் இங்குள்ள தமிழ் சிங்கள இனக்குழுக்கள் எவ்வாறு தோன்றி பரிணாமம் அடைந்தன என்பதை உறுதி செய்ய தொல்லியல் சின்னங்களே நம்பத்தகுந்த ஆதாரங்களாக அமைகின்றன. இலங்கையில் வரலாற்றைக் கூறும் பாளி இலக்கியங்கள் வாய்மொழிக் கதைகளையும் ஐதீகங்களையும் அடிப்படையாகக் கொண்டவையே, இவை ஆதிக்குடிகள் சிங்களமக்கள் என்று கூறுகின்ற போதிலும் சமீப கால தொல்லியலாய்வுகள் இலங்கையின் வரலாற்றுக் காலங்களில் இருந்தே தமிழ் இனக்குழுவும் மொழியடிபப்டையில் ஓர் இனக்குழுவாக மாற்றம் பெற்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இவ்வாறு தமிழர்கள் ஆரம்ப காலத்திலிருந்து இனக்குழுவாக அதிகளவில் வாழந்;த பிரதேசமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. பல்வேறுபட்ட பண்பாட்டுப் பாரம் பரியங்களையும் கலாச்சார சிறப்புக்களையும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்த்pல் இருந்N;த தன்னகத்N;த கொண்டு; ஏனைய பண்பாட்டு பிராந்தியங்களுடன் ஒப்பிட்டுப் பாரக்கும்; போது அப்ப்pரதேசங்களில் இருந்து வேறுபடுத்த்pக் காட்டும் அளவிற்கு தனித்துவமான பண்பாட்டம்சங்களையும,; கொண்டு; கம்ப்Pரமாக மிளிரும் யாழப்;பாண மக்களுடைய புராதனகால பண்பாடுகள் கலைகள், உணவுப் பழக்கங்கள், உறவுமுறைகள், கலாச்சார சிறப்புக்கள் அனைத்தும் தற்காலத்தில் மாற்றமடைந்து வருவதனை கண்டுகொள்ள முடிகின்றது.
ஊலகமயமாக்கல், திறந்த பொருளாதாரக்கொள்கை, பிற்பண்பாட்டு ஊட்டம், புலப்பெயர்வு, கையளிப்புக் குறைபாடு, பழைமை போற்றாத பண்பு, நவீன தகவல் தொழில்நுட்பத் துறையின் அதீத வளர்ச்சி, முதலான பல்வேறு காரணிகளால் தொன்மைச் சிறப்புமிக்க எமது யாழ்ப்பாணப் பண்பாட்டின் பல்வேறு வகைமைகளும் மிகவேகமாக வழக்கிழந்து வருகின்றன. இவ்வாறான நிலை தொடருமேயானால் எமது பண்பாட்டின் தனித்துவமான அடையாளங்களை தேடிக்கண்டறிய வேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் எழுகின்றது. இன்றைய காலகட்டத்தில் மக்களிற்கு புதிய விடயங்களையும் அறிமுகப்படுத்துவதிலும் தெரியப்படுத்துவதிலும் நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் முக்க்pயம் பெறுகின்றன. இதனை விட புதிய விடயங்களை தெரிய வேணடு;மென்றால் இணையம் மூலம் தேடி கண்டறிகின்றார்கள.; ஆனால் பழைமையான விடயங்களையும் பண்பாடுகளையும் விளம்பரம் செய்வதற்கு யாரும் முன் வருவதும் இல்லை. பழைமையான பொருட்கள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவதுமில்லை. பழையன கழிதல் புதியன புகுதல் என்ற ரீதியில் தமது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக் கொள்கின்றார்கள். நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களால் முன்n;னடுக்கப்பட்டு வரும் கவர்ச்ச்pகரமான கலாச்சார விளம்பரங்களால் ஈர்கக்ப்பட்ட மக்கள் நவீன நாகரிகமான முறையிலேயே வாழ்வதற்கு முன்வருகின்றார்கள.; இவ்வாறான மக்களால் ஒரு நாட்டினுடைய பழைமையான பண்பாட்டம்சங்களை தற்காலத்தில் நடைமுறைப்படுத்துவதென்பது இயலாமல் உள்ளது. இவ்வாறான ஓர் நிலை சமகாலத்த்pல் நிகழ்வதால் புராதனகால பண்பாட்டம்சங்கள் பாரம்பரியங்கள் சடங்கு முறைகள் கட்டு;ப்பாடுகள், வாழ்க்கை முறைகள், கலை மரபுகள் என்பன மறக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பிரதேசத்தின் இன்றைய இளம் சந்ததியினர் மேலைத்தேச பண்பாட்டம்சங்கள் , கலை, கலாச்சாரம் , உணவுமுறை, ஆடை அமைப்பு, என்பவற்றால் தமது இனத்திற்கென்று பழைமையான அடையாளங்கள் மூதாதையர் வரலாறு உண்டு என்பதையும் அவர்களுக்கு உணர்த்தும் வகையில் மூதாதையர்களினுடைய பழக்கவழக்கங்கள், பண்பாட்டு கலாச்சார அம்சங்களையும் புலப்படுத்தும் வகையில் புராதனகால பண்பாடு, கலை,மொழி,ஆடை அமைப்பு, வாழ்க்கைமுறை என்பவற்றை எடுத்துக் கூறவேண்டிய தேவை தற்காலத்தில் ஏற்பட்டுள்ளது. ஒரு பிரதேசத்தை மொழி, மதம், கலை பண்பாடு பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, சடங்குகள், சம்பிரதாயங்கள் என்பவற்றால் தனித்து அடையாளப்படுத்தி பாரக்;கும் மரபு நெடுங்காலமாக இருந்து வருகின்றது. இவ்வாறான பண்பாட்டம்சங்கள்
அப்பிரதேசத்தினுடைய வரலாற்று பெறுமதிமிக்க பாரம்பரிய சொத்துகக்ளாகும். இப்பண்பாட்டு பெறுமதிகளை பேணிப்பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அவற்றை கையளிக்கும் பொறுப்பு அனைவருக்குமுரியதாகும். ஆனால் இவ்வாறான பழைமையான பண்பாட்டம்சங்களை பேணிபாதுகாத்து தொல்லியல் சின்னங்களை அரசியலிற்கு சாதகமாக பயனப்டுத்தும் மரபு தற்பொழுது ஏற்பட்டுள்ளது. அரசியலிற்காக மட்டுமே பழமையான சின்னங்களை சாதகமாக பயனப்டுத்தும் மரபு தீவிரமாக காணப்படுகின்றது. ஏனைய மக்களிற்கு இவ்வாறான புராதனகால பண்பாட்டு சின்னங்களில் முக்கியத்துவம் பற்றிய அறிவு காணப்படுவதில்லை, மேலைத்தேய நாட்டவர்களினுடைய நடை உடை பாவனை என்பவற்றை பின்பற்றுவதனையே நாகரிகமாக நினைத்து அதனை பின்பற்றுபவர்கள் தமது நாட்டில் காணப்படும் பழக்கவழக்கங்களை வெளியில் கூறுவதையும் அதை நடைமுறைப்படுத்துவதையும் வெட்கமாக நினைக்கின்றார்கள.; ஆனால் மேலைத்தேய நாட்டவர்கள் தமது நாட்டின் பழைமைகளையும் பண்பாடடு;ச் சின்னங்களையும் தமது நாட்டில் பாதுகாப்பதை தமது உயிரிற்கு மேலாக நினைக்கின்றார்கள். இதனால் தமது பண்பாடடு; சின்னங்கள் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அவற்றை தேடி கண்டறிந்து தமது நாட்டில் பாதுகாத்து அதனை மக்களின் பாவனைக்காக நூதனசாலைகளில் வைத்து காட்சிப்படுத்துகின்றார்கள.; மேலைத்தேயவர்கள் தமது பண்பாட்டை பாதுகாப்பதோடு தமது பண்பாட்டம்சங்களை பிற நாட்டிற்கும் பரவலடையச் செய்கின்றனர். ஆனால் உளந்hட்டு மக்கள் பிறர் பண்பாட்டை உள்வாங்குவதோடு மட்டுமே நின்றுவிடுகிறார்கள். எமது பண்பாட்டுச் சின்னங்கள், நாணயங்கள் கலைமரபுச்சின்னங்கள,; இந்து விக்க்pரகசிலைகள் என்பவற்றை பணம் ஈட்டும் நோகக்த்திற்காக அதனை மேலைநாட்டவர்களிற்கு விற்பனை செய்கின்றார்கள.; தென்னிலங்கையில் வீதியோர வியாபாரிகள் யாழ்ப்பாணத்தின் பண்பாட்டுச் சின்னங்களை விற்பனை செய்து வருவதை இன்றும் கண்டுகொள்ள முடிகின்றது.
பண்பாட்டுச் சின்னங்களின் முக்கியத்துவம் பற்றி மக்களிறகு; தகுந்த விழிப்புணர்வும,; பண்பாட்டு;ணர்வும் இல்லாமையே இதற்கு காரணமாகும்.
இன்றைய நவீன காலத்த்pல் மனிதனுடைய தேவைகள் அதிகரித்து வருவதாக உள்ளதால் பணம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொள்கின்றார்கள.; இதனால் பிறர் நலம் குறைவடைந்து மக்கள் மத்தியில் சுயநலம் என்கின்ற உணர்வு மேலோங்கி காணப்படுகின்றது.
இதனால் ஆரம்பகாலத்தில் இருந்த “கூட்டுக்குடும்பம்” என்ற மரபு மருவிச் செலக்pன்றது. சமுதாயத்த்pனை சரியான முறையில் வழிநடத்திச் செல்ல ஓர் மூத்த சமுதாயம் இல்லாமல் போய்விட்டது. இதனால் குடும்பங்களில் பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன. தனிமையாக வாழ்கின்றனர். புரிந்துணர்வு என்பது மக்கள் மத்தியில் மருவி வருகின்றது. இதனால் அதிகளவிலான தவறுகள் செய்வதற்கு இச்சூழல் இடமளிக்க்pன்றது. புராதனகால மக்கள் வாழ்க்கையை சரியான முறையில் வாழ்வதற்காக பல்வேறு கோட்பாடுகளையும் கட்டு;ப்பாடுகளையும் வகுத்திருந்ததோடு ஏனைய மக்களையும் அதன்படியே வழிநடத்தி சென்றார்கள.; இதனை இன்றைய இளைஞர்கள் “மூடநம்பிகi;ககள்” என்று புறம் தள்ளி விட்டு முதியோர் கூறிய வாழ்க்கைமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால் இன்றைய சமூகத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் கலாசச்hர சரீழிவுகள் என்பன இடம் பெறுவதை காணமுடிகின்றது.
புராதனகால மக்கள் சிறந்த சுகாதார வசதியுடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். இவர்களது ஆயுடக்hலம் 100 வருடங்களுக்கு மேலாக இருந்தது. இதற்கு காரணம் இயற்கையான உணவுகளையும் போசாக்கான உணவுகளையும் உண்டமையாகும். புராதன மக்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் என்பவற்றின் மூலம் உணவுகளை இடித்தும் அரைத்துமே உட்கொண்டார்கள் ஆனால் தற்காலத்தில் இளைஞர்களுக்கு அம்மிஈ உலக்கை, ஆட்டுக்கல் என்பவற்றின் பயனப்hடுகள் பற்றி அறியாமல் உளள்னர். இதற்கு காரணம் நவீன தொழில் நுடப்சாதனங்களின் வளர்ச்சியாகும். சிறிது காலத்தின் பின் புராதன பாவனைப் பொருட்கள் பயன் பாட்டில் இல்லாமல் மருவிவிடும் நிலை ஏற்பட்டுவிடும். அந்த வகையில் தற்காலத்தில் வழக்கொழிந்து வரும் யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு மரபுகள் பற்றி ஆராய்வது காலத்தின் தேவையாகவே அமைகின்றது.