dc.description.abstract |
யாழ்ப்பாணத்தில் அண்மையில் பல கல்வெட்டுக்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவற்றைப் படியெடுத்தும் படமெடுத்தும் வாசிக்கும் முயற்சியின் விளைவால் பல தகவல்களைப் பெறமுடிந்தது. இக்கல்வெட்டுக்களால் பல பண்பாட்டு அம்சங்களைப் பெறமுடிந்தது. தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்களில் இருந்து யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள் சில தனித்துவமான பண்புகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். கொடித்தம்ப சாசனம், பெருச்சாளி வாகனச்சாசனம,; அடுக்குத்தபீச்சாசனம,; தெரு மூடிமடச்சாசனம், தீர்த்தக்கேணிச் சாசனம், சங்கிலியன் தோப்புச் சாசனம் எனப் பலவகைப்பட்ட சாசனங்கள் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றன. அவற்றினூடாக வெளிவரும் தமிழ்ப்பண்பாட்டு மரபுகளை ஆய்வு செய்வதாக இக்கட்டுரை அமையும். |
en_US |