Abstract:
ஆண் நிலைப்பட்ட சமூக ஒழுங்கினுள் உற்பத்தி செய்யப்படும்
காண்பியப் பண்ட்பாடினுள் கட்டமைக்கப்படும் பெண் உடல் பற்றிய படிமம் பற்றியும்,
அக்கட்டியமைத்தல் படிமுறையினோடு தொழிற்படும் ஆண் நிலைப்பட்ட உற்றுப்பார்த்தலின்
அரசியல் பற்றியும், பார்வையாள உரிமைத்துவம் பற்றியும் பெண்ணிலைவாத விமர்சனம் சார்ந்த காண்பியப் பண்பாடு, மற்றும் கலை வரலாற்று எழுத்துக்கள் கவனத்திற்குக் காெணர்ந்துள்ளன. இதே சமூகச் சட்டத்தினுள் ஆண் உடலின் பிரசன்னமாக்குதலும் நிகழ்ந்துவரும் நிலையில், அதற்குப் பின்னால் இயங்கும் பார்வை நிலைகளைத் திரைவிலக்குதல் என்பதும் இன்றைய கலை மற்றும் காண்பியம் தொடர்பான கருத்தாடலில் தவிர்க்கவியலாத்தாென்றாகும்.