Abstract:
இக்கட்டுரை போர்த்துக்கல், ஒல்லாந்தர் ஆகிய ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையின் வடபுலத்தில் பின்பற்றிய மதக்கொள்கை பற்றிய ஒரு ஒப்பீட்டு ரீதியான வரலாற்று ஆய்வாகும். 16ஆம் நூற்றாண்டு வரை தனியான ஆட்சி முறையின் கீழ் தமிழ் இராச்சியமாகக் காணப்பட்ட இப்பிரதேசம் 16ஆம் நூற்றாண்டுப் பின்னர் காலணித்துவ வாதத்திற்குட்பட்டது. யாழ்ப்பாணம் உட்பட தீவகம் முழுவதும் இவ்விரு பகுதியினரதும் (காலணித்துவவாதிகள்) தங்களது சமயத்தினை பரப்புவதற்கு கையாண்ட வழிமுறைகள் எல்லாமே பொதுமையானதாகும். ஆனால் அவர்களின் செயற்பாடு வடபுலத்தின் வெற்றியளிக்கவில்லை. இவ்வாய்வானது வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் பார்க்கபடுகிறது. இது முதலாம், இரண்டாம் நிலை தரவு மூலாதாரங்களைப் பயன்படுத்தி அளவுசார், பண்புசார் மற்றும் ஒப்பியல் முறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.