DSpace Repository

திருக்குறள் - திருக்குர்ஆன் வகுத்துள்ள அறநீதிக்கோட்பாடுகள் சமூக வரலாற்று நோக்கில் ஒப்பியல் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Arunthavarajah, K.
dc.contributor.author Sivakumar, M.
dc.date.accessioned 2022-02-21T06:48:15Z
dc.date.accessioned 2022-06-27T07:09:17Z
dc.date.available 2022-02-21T06:48:15Z
dc.date.available 2022-06-27T07:09:17Z
dc.date.issued 2016
dc.identifier.issn 978-955-627-074-7
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5375
dc.description.abstract தனிமனிதனுடைய உரிமைகளும் கடமைகளும் சமூகப் பிணைப்புக்களும் பழக்கவழக்கங்களும், விருப்பு வெறுப்புக்களும் அனைத்தும் பொதுவாக நீதி மற்றும் அறக்கோட்பாடுகளினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 'நீதி' என்பது தமிழ் மொழிக்கு சொந்தமானதொரு சொல் அல்ல. அது வடமொழிக்குச் சொந்தமானதொரு சொல்லாகக் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் இச்சொல்லானது வடமொழியில் நடாத்துதல், இயக்குதல் போன்ற அர்த்தத்தில் கையாளப்பட்டிருக்க வேண்டும். பின்னர் நாளடைவில் கருத்து வளர்ச்சிக்கேற்ற வகையில் அதனது பொருள் விரிவடைந்தும் மாற்றமடைந்தும் வந்துள்ளது. அவ்வாறே 'அறம்' என்ற சொல்லுக்கு விடைகாணுவதென்பதும் மிகவும் கடினம். பொருளிலும் இச்சொல்லானது நெகிழ்ச்சி கொண்டதாக உள்ளது. ஒரு குறிக்கப்பட்ட சமயத்தவர்களுக்கோ அல்லது சமுதாயத்தவருக்கோ மொழியினருக்கோ மட்டுமன்றி உலகப் பொதுமறையாக வைத்துப் பேசப்படுபவை திருக்குர்ஆனும் திருக்குறளுமே. எனவே உலகப் பொதுமறை என்ற சொல்லே இவை இரண்டுக்கும் இடையிலான கருத்தொற்றுமையினைப் பிரதிபலிக்கின்றன. மனிதமேம்பாட்டின் பொருட்டு அவர்கள் கையாள வேண்டிய வழிமுறைகள் பற்றி திருக்குர்ஆன் வழி வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறுவதற்கு இவ்வுலகில் நபிகள் அவதரித்தார். இஸ்லாம் என்றாலே சமாதானம், கட்டுப்பாடு என்று பொருள்படும். இறைவன் அருளிய திருமறையாம் திருக்குர்ஆனின் கண்ணியம் பொருந்திய மொழிகளையும் வையகத்தினை உயிர்ப்பிக்க வந்த முகமதுநபி அவர்களது போதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் தெளிவான நேரிய வழியில் பின்பற்றுதலே இஸ்லாமியக் கொள்கையாகும். இஸ்லாமியப் பண்பாடானது முழு மனிதவர்க்கத்தின் ஒட்டுமொத்தமான வளர்ச்சியைக் குறிக்கின்றது. அவ்வாறே திருக்குறள் தருகின்ற கருத்துக்கள் மக்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளன. தாம் வாழ்ந்த காலகட்டத்தினைக் கொண்டு திருவள்ளுவரினால் முழுமைப்படுத்தப்பட்ட அறÁலாக இது அமைந்துள்ளது. எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஓர்வகைத் தன்மை. ஆத்தகைய பிறப்பில் ஏற்றத்தாழ்வு காணாத சமநிலைப் பார்வையினை உடையது, திருவள்ளுவர் மானுடம் போற்றும் ஒப்பற்ற உலகப் பொதுமறையில் காலத்திற்கேற்ப மாறாத, மாற்றமுடியாத அழியாத பண்பாட்டினை பதிவு ஏற்றியுள்ளார். எனவே 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற பூங்குன்றனாருடைய பாடல் வரிகளுக்கு ஏற்ற வகையில் உலக மக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்ற வகையில் திருக்குர்ஆனிலும் அறÁலான திருக்குறலிலும் பல ஒப்புமைக் கருத்துக்கள் காணப்படுகின்றன. அவ்வகையில் திருக்குர்ஆனுடைய பெருமைகளை நபிகள் வாயிலாகவும் திருக்குறளின் பெருமைகளை வள்ளுவரது வாயிலாகவும் அறிந்துகொள்ள முடிகின்றது. பெருமளவிற்கு ஒப்பியல் ஆய்வாக அமைகின்ற இவ்வாய்வானது சமூக, வரலாற்றினடிப்படையில் ஆராயப்படுகின்றது. இரண்டினதும் பொதுவான தன்மைகளை எடுத்துக்காட்டுவதும் இவை இரண்டினையும் ஒப்பிட்டு அவற்றில் காணப்படுகின்ற ஓரியல்பான நீதி மற்றும் அறக்கருத்துக்களை வெளிக்கொண்டுவருவதும் இவ்விடயமாக ஆராய விரும்புகின்ற ஆய்வாளர்களுக்கான வழிகாட்டியாகவும் அமைய வேண்டுமென்ற நோக்கங்களை இவ்வாய்வு கொண்டுள்ளது. திருக்குறள், திருக்குர்ஆன் ஆகியவை இரண்டும் பிரதான முதற்தர ஆதாரங்களாகவும் பின்னாளில் இவற்றினை அடிப்படையாக வைத்து எழுந்த சில Áல்கள், கட்டுரைகள் போன்றனவும் இரண்டாந்தர ஆதாரங்களாகவும் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுப்படப் பார்த்தால் இவை இரண்டுமே மக்களது வாழ்வினை மேம்படுத்த தோன்றியவை. தூம் தோன்றிய நோக்கங்களையும் வெற்றிகரமான வகையில் நிறைக்கொண்டதுடன் நிறைவேற்றியும் வருகின்றன. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject அறநெறிக்கருத்துக்கள் en_US
dc.subject உலகப்பொதுமறைகள் en_US
dc.subject அன்புடமை en_US
dc.subject இல்வாழ்க்கை en_US
dc.subject இன்சொல் கூறுதல் en_US
dc.title திருக்குறள் - திருக்குர்ஆன் வகுத்துள்ள அறநீதிக்கோட்பாடுகள் சமூக வரலாற்று நோக்கில் ஒப்பியல் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record