DSpace Repository

ஐந்து ஆளுமைப் பண்பும் இளங்குற்றவாளிகளும்: அச்சுவேலி சிறுவர் சீர்த்திருத்த பாடசாலையை அடிப்படையாக கொண்ட ஓர் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Tamizhini, R.
dc.contributor.author Kumari, S.A.
dc.contributor.author Rajkumar, R.A.
dc.date.accessioned 2022-02-14T06:51:36Z
dc.date.accessioned 2022-06-27T07:36:21Z
dc.date.available 2022-02-14T06:51:36Z
dc.date.available 2022-06-27T07:36:21Z
dc.date.issued 2019
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5358
dc.description.abstract சிறுவர்கள் நாட்டின் தலைவர்கள் என்பது நாம் அறிந்த முதுமொழி ஐக்கிய நாடுகள் சபையின் படி 18 வயதிற்க்குட்பட்ட ஆண் பெண் இருபாலரும் சிறுவர்கள் என வரையறுத்து அவர்களுக்கு கட்டாய கல்வியனை வலியுறுத்துகின்றது. ஆனால் இன்றைய பத்திரிகைகளில் பல பக்கங்களில் குற்றத்துடன் தொடர்புடையவர்களாக சிறுவர்களே காணப்படுகின்றனர். பதினெட்டு வயதிற்கு உட்பட்ட தனியன் ஓருவரினால் சமுதாயத்தின் நலனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய நடத்தை எந்த வகையில் இருந்தாலும் அது இளங்குற்றநடத்தை ஆகின்றது. இக்குற்றநடத்தையை மேற்கொள்வோரை ‘இளம் குற்றவாளிகள்' என அழைப்பர். இளம் குற்றவாளிகள் எனும் பதத்தினை ஆங்கிலத்தில் juvenile delinquency என்பர். juvenile, delinquency எனும் சொற்களானது இலத்தீன் மொழியான juve என்பதிலிருந்து இளமையானது எனும் கருத்தினை கொண்டும் delinquanir என்பது இளமையில் செய்ய வேண்டிய விடயங்களில் இருந்து தவறுதல், கடமை வழுவுதல் எனும் கருத்தினை கொண்டும் காணப்படுகின்றது. இளங்குற்றங்களிற்கான காரணங்களையும் குறைப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிய பல ஆய்வுகள் மேற்கொண்ட வண்ணம் உள்ளன. சிறுவர்கள் குற்றங்களுடன் தொடர்புபடுவதற்கான காரணங்களாக குடும்பம், சூழல், வளர்ப்பு முறை, சிறுவயது அனுபவங்கள் என பல காரணிகள் கண்டறிப்பட்டாலும் ஆளுமையின் பங்கும் பல ஆய்வுகளில் வலியுறுத்தப்படுகின்றது. உளவியலை பொறுத்தவரை மனிதனது நடத்தையினை கட்டமைப்பதில் ஆளுமை பண்புகள் மிக அடிப்படையானவை என்கின்றார் உளவியலாளர் கார்ள்யுங். அதனை அடிப்படையாக கொண்டு இவ் ஆய்வானது இளங்குற்றவாளின் குற்ற நடத்தைக்கும் அவர்களது ஆளுமைக்கும் இடையிலான தொடர்பினை ஆராய்வதை பிரதான நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கான மாதிரியாக யாழ்ப்பாண அச்சுவேலி சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் இருந்து 30 பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஆண் சிறுவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.இதற்கென ஐந்து பண்பு ஆளுமை கொள்கைகளை அடிப்படையாக கொண்ட 44 வினாக்களை கொண்ட வினாக்கொத்தின் மூலமும் நேர்காணல் மூலமும் முதன்மை தரவுகள் பெறப்பட்டன. வினாக்கொத்தானது ஆய்வாளரினால் கொள்கைகளில் முன்வைக்கப்பட்ட பண்புகளை கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இளம்குற்றவாளி என நிருபிக்கப்பட்ட சிறுவர்கள் இவ் ஐந்து ஆளுமை பண்புகளில் எவ்கோணத்தில், எவற்றில் மிகைப்பெற்று விளங்குகிறார்கள் என அடையாளம் காட்டபடபயன்பட்டுள்ளது. பெறப்பட்ட தரவுகளினை spss மென்பொருள் கொண்டு தகவல்கள் பெறப்பட்டன. ஆய்வின் முடிவாக அக முகி புறமிகு தன்மையான ஆளுமை பண்பில் புறமிகு தன்மையை அதிகம் கொண்டோரும், மனசான்று தன்மை குறைவாக காணப்படுவேரும், அதிகமாக உணர்ச்சிக்கு ஆட்படும் மனநிலை உறுதியற்ற தன்மை கொண்டவர்கள் அதிகமாக குற்றங்களுடன் தொடர்புடையவர்களாகவும் இலகுவில் குற்றங்களிற்கு ஆட்படுபவர்களாகவும் இணங்காணபட்டுள்ளனர். சிறுவர்களை அவர்களது ஆளுமையினை அடிப்படையாக கொண்டு அனுகுவதன் மூலம் அவர்களை நல்வழிப்படுத்தவும் மேன்மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்கவும் வழிச்செய்வதாக இவ் ஆய்வு காணப்படுகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject இளங்குற்றவாளிகள் en_US
dc.subject ஐந்து ஆளுமைப்பண்புகள் en_US
dc.title ஐந்து ஆளுமைப் பண்பும் இளங்குற்றவாளிகளும்: அச்சுவேலி சிறுவர் சீர்த்திருத்த பாடசாலையை அடிப்படையாக கொண்ட ஓர் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record