DSpace Repository

வட்டக்கச்சி கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சமூக பொருளாதார நிலை

Show simple item record

dc.contributor.author Suthesini, J.
dc.contributor.author Uthayakumar, S.S.
dc.date.accessioned 2022-01-21T02:26:43Z
dc.date.accessioned 2022-06-27T05:13:54Z
dc.date.available 2022-01-21T02:26:43Z
dc.date.available 2022-06-27T05:13:54Z
dc.date.issued 2017
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5126
dc.description.abstract இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கடந்த மூன்று தசாப்த கால யுத்தம் மற்றும் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற யுத்தம் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மீள்குடியேற்றம் என்பவற்றின் காரணமாக அதிகளவான அநாதைகள், விதவைகள், அங்கவீனர்கள் போன்றவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் வடக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ளதே கிளிநொச்சி மாவட்டமாகும். இம் மாவட்டமானது 04 பிரதேச செயலர் பிரிவினையும் கரைச்சி பிரதேச செயலர் பிரிவானது 42 கிராம சேவகர் பிரிவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் இரத்தினபுரம் கிராமமே ஆய்விற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் அதிகளவாக சுயதொழில் முயற்சிகளிலேயே ஈடுபடுகின்றனர். இருந்தபோதிலும் போரிற்கு பிற்பட்ட தற்போதய காலங்களில் இக் கிராமத்தில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்படுகிறது. அத்துடன் கடந்த கால யுத்தத்தின் வடுக்களை அதிகமாக தாங்கியுள்ளதாக காணப்படுகின்றது. இக்கிராமத்தில் உள்ள மொத்த சனத்தொகையில் (874) பெண்களின் எண்ணிக்கை 543 ஆக காணப்படுகின்றது. அவற்றில் 205 குடும்பங்களில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களாக 75 குடும்பங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் ஆய்வின் பிரதான நோக்கமாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சமூக பொருளாதார நிலைமைகளினை இணங்காணுதலே ஆகும். இருப்பினும் துணைநோக்கங்களாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பொருளாதார ரீதியான அந்தஸ்தினை கண்டறிதல், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பொருளாதார ரீதியான கண்டறிதல் என்பனவாக அமைகிறது. இவ்வகையில் பெண்களின் சம்பளத்திற்கும் அவர்களின் குடும்ப செலவிற்கும் இடையே நேரான தொடர்பு காணப்படுகின்றது என்ற முன் வைக்கப்பட்ட கருதுகோளானது பரிசீலனை செய்யப்படுவதற்கென 80 மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் SPSS என்ற கணித மென் பொறியானது பயன்படுத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அவ்விரு மாறிகளுக்குமிடையில் இணைவானது 52 % மாகக் காணப்படுகின்றது. இவ் இணைவானது இவ்விரு மாறிகளும் ஓரளவான தொடர்பினை கொண்டுள்ளன என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. எடுத்துக் கொள்ளப்பட்ட இணைவுக்குணகத்தினை நோக்குகின்ற போது P - Value 0.000 ஆகக் காணப்படுகின்றது. இங்கு P< 0.05 ஆகக் காணப்படுகின்றது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட கருதுகோளை ஏற்றுக் கொள்வதாகும். எனவே எடுத்துக் கொள்ளப்பட்ட கருதுகோளானது ஏற்றக்கொள்ளப்பட்டுள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher 6th Annual International Research Conference en_US
dc.subject சுயதொழில் முயற்சி en_US
dc.subject பெண் தலைமைக் குடும்பங்கள் en_US
dc.subject சமூக பொருளாதார நிலை en_US
dc.subject பெண்களின் சம்பளம் en_US
dc.title வட்டக்கச்சி கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சமூக பொருளாதார நிலை en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record