Abstract:
இமையாணன் மேற்கு பிரதேசமானது கரவெட்டி செயலர் பிரிவிற்குட்பட்ட பிரதேசமாகும். இப் பிரதேசம் 564 கெக்ரேயர் பரப்பினைக் கொண்டது. இமையாணன் பிரதேசத்தில் 8 கிராமங்கள் உள்ளன. இதில் இமையாணன் மேற்கு பிரதேசமும் ஒரு பிரிவாகும். இப் பிரதேசத்தின் பிரதான பொருளாதார நடவடிக்கைகள் விவசாயம்,வர்த்தகம், மீன்பிடி என்பன காணப்படுகிறது. இதில் சில்லறை வர்த்தகம் என்பதே பிரதானமாக காணப்படுகின்றது. J/359 கிராமசேவகர் பிரிவில் மொத்த குடியாக 1166 குடும்பங்கள் காணப்படுகின்றன. இங்கு 176 குடும்பங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன. இங்கு சில குடும்பங்கள் கடைகள் அமைத்து ஈடுபடுகின்றன.மிகுதி தமது வீடுகளிலும், நடைபாதைகளிலும் வர்த்தகம் செய்கின்றனர் இவ்வாய்விற்கான தரவுகளும் தகவல்களும் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத்தரவு மூலங்களிலிருந்து பெறப்பட்டன. தரவுகள் பண்புசார் மற்றும் அளவுசார் முறைகளினூடாகப் பெறப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள் புள்ளிவிபரவியல் முறையினைக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஆய்வு முடிவுகள் தொகுத்தறி முறையினைப் பிரதானமாகவும் உய்த்தறி முறையினைத் துணையாகவும் கொண்டு பெறப்பட்டுள்ளன. சில்லறை வர்த்தக முயற்சிகளில் ஈடுபடுவதை தமது வாழ்வாதாரமாக கருதுகின்றனர். இவ் வர்த்தகத் துறையானது இப்பிரதேச மக்களின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றுகின்றது.அந்த வகையில் சில்லறை வர்த்தக துறையானது இப்பிரதேச மக்களின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றுகின்றது. ஆனாலும் பொரும்பாலான வர்த்தகர்கள் தமது தொழிலில் பல பிரச்சனை காரணமாக பாரிய இழப்புகளை எதிர்கொள்கின்றனர். இவ் ஆய்வின் பிரதான நோக்கமானது ஆய்வு பிரதேசத்திற்கு உட்பட்ட சில்லறை வர்த்தக நிலையங்களையும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இனங்காணுதல் ஆகும்.