dc.description.abstract |
யுத்தத்திற்குப் பின்னரான மக்களின் சமூகப்பொருளாதார நிலையும், வறுமைத்தணிப்பும் என்ற இந்த ஆய்வானது ஆய்வுப்பிரதேசத்தின் அபிவிருத்தி சார் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருவதாக அமைகின்றது. இதன் பிரதான நோக்கமாக ஆய்வுப்பிரதேசத்தின் யுத்தத்திற்குப் பின்னரான மக்களின் சமூகப்பொருளாதார நிலையினையும், வறுமைத்தணிப்பு நடவடிக்கைகளையும் இனங்காணல் என்பதும், துணை நோக்கங்களாக ஆய்வுப்பிரதேசத்து மக்கள் அபிவிருத்தி சார்பாக எவ்விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை இனங்காணல், ஆய்வுப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் எவ்விதமான அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்பதனை இனங்காணல் என்பதுவும் காணப்படுகின்றது. ஆய்வின் கருதுகோள்களாக ஆய்வுப்பிரதேசத்தில் சமூகப் பொருளாதார நிலைமை பின்தங்கிய நிலையிலேயேக் காணப்படுகின்றது. ஆய்வுப்பிரதேசத்தில் வறுமை அதிகளவில் காணப்படுகின்றது. ஆய்வுப்பிரதேசத்தில் வறுமைத்தணிப்பு நடவடிக்கைகள் திறனற்று காணப்படுகின்றது என்பனவும் முன்வைக்கப்படுகின்றன. ஆய்வின் எழுவினாக்களாக ஆய்வுப்பிரதேசத்தின் யுத்தத்திற்குப் பின்னரான மக்களின் சமூகப்பொருளாதார நிலை எவ்வாறு காணப்படுகின்றது?, வறுமை நிலை எவ்விதம் காணப்படுகின்றது?, ஆய்வுப்பிரதேசத்து மக்கள் அபிவிருத்தி சார்பாக எவ்விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்?, ஆய்வுப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் எவ்விதமான அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்? என்பனவும் முன்வைக்கப்படுகின்றது. ஆய்வின் வரையறைகளாக இந்த ஆய்வானது கரைச்சிப் பிரதேசத்தின் சாந்தபுரம் கிராமத்தை மட்டுமே கருத்திற் கொள்கின்றது. தகவல்கள் 44 குடும்பங்களிடமிருந்து மாத்திரமே பெறப்பட்டுள்ளன. வினாக்கொத்தில் வழங்கப்பட்டுள்ள வினாக்களின் எண்ணிக்கை வரையறைக்குட்பட்டது. வருமானம், உற்பத்தி போன்றன தொடர்பான தரவுகளில் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக காணப்படுகின்றது. கல்வி, சகாதாரம் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை அளவீட்டுக் கூறுவதில் சிரமங்கள் காணப்படுகின்றன என்பனவும் காணப்படுகின்றன. தரவுகளானவை இரு வழிகளில் நோக்கப்படுகின்றன. அவையாவன முதலாம் தரத் தரவுகள் மற்றும் இரண்டாம் தரத் தரவுகள் என்பனவாகும். ஆய்விற்காக குழும மாதிரி (Cluster sampling) முறை மற்றும் எழுந்தமானமான மாதிரி (Random Sampling) முறை என்பன பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களை மாதிரியாகத் தெரிவு செய்யும் போது குழும மாதிரி முறையும், ஆய்விற்கான தரவுகளைப் பெறுவதற்கு நபர்களைத் தெரிவு செய்யும் போது எழுந்தமானமான மாதிரி முறையும் பயன்படுத்தப்பட்டு தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. இங்கு மொத்த குடும்பங்களில் 10% மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டதோடு 44 பேர் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இங்கு ஆய்விற்குட்படுத்தப்பட்ட 44 பேரும் ஸ்னோபோல் மாதிரி (snowball sampling) அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆய்வுப்பிரதேசத்தில் 439 குடும்பங்களும், 1298 குடும்ப அங்கத்தவர்களும் வாழ்கின்றனர். அவ்வாய்வுப் பிரதேசத்தில் பெரும்பாலும் விவசாயிகளே அதிகளவில் காணப்படுகின்றனர். அத்துடன் பொருளாதார நிலைக்கும், மக்களின் குடும்ப செலவிற்குமிடையே ஒரு சமத்துவமற்ற தன்மை காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. அதன் விளைவாக சமூகப் பொருளாதார குறிகாட்டிகள் இங்கு பின்தங்கிய நிலையிலேயேக் காணப்படுகின்றது. இதன் மூலமாக மக்களின் வாழ்வாதார வசதிகளானவை பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இதன் படி நேரடி அவதானம் மற்றும் வினாக்கொத்து மூலமான தரவு சேகரிப்பின் மூலமாக ஆய்வின் கருதுகோள்களானவை சரியானவை என நிரூபிக்க முடிகின்றது. |
en_US |