Abstract:
பொதுவாகவே அண்மைக்காலங்களில் ஆசியப் பிராந்தியத்தில் அதுவும் குறிப்பிட்ட சில நாடுகளில்
சிறபான்மையினமான முஸ்லிம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கம் இனவாதத்தின் பின்னணியில்
உருவான அடக்குமுறைகளின் உச்ச வெளிப்பாடுகளிலொன்றுதான் மியன்மாரில் (சுழாiபெலய) முஸ்லிம்களுக்கு
எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனச்சுத்தீகரிப்பு நடவடிக்கையாகும். இன்றுவரை பயன்கரவாதத்தினை
அழிப்பதென்ற போர்வையில் மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகின்றனரென்பது
சர்வதேசங்கள் ஏற்றுக்கொள்ளுகின்ற வெளிப்படையான உண்மையாகவே காணப்படுகின்றது. அங்கு
ரோஹிங்யர்களுகெதிராக 2017இன் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட மோசமான இன ஒடுக்குமுறையான
நடவடிக்கைகளின் பின்னணியில் அவர்கள் தமது உயிரையும் உடமைகளையும் இழந்து அனாதைகளாகி பங்களாதேஷ; போன்ற
அயல் நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர். பேளத்த மத நாடான மியன்மாரில் அங்குள்ள குறிக்கப்பட்ட
மதப்பிரிவினைச் சேர்ந்த துறவிகள் சிலரும் தேசியவாதிகள் பலரும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக
நடைபெற்று வருகின்ற கலகங்களில் பிரதான பங்கெடுத்து வருகின்றனர். காலணித்துவ ஆட்சியாளரான
ஆங்கிலேயரது காலத்திலிருந்தே இவ்வின முஸ்லிம் மக்களுக்கெதிரான உணர்வுகள் பெரும்பான்மையின
பர்மியர்களிடமிருந்து வருவதனை வரலாற்று ரீதியாக அவதானிக்க முடியும். இக்காலப்பகுதியே அதனது தொடக்க
காலமாகவும் உள்ளது. இதனது தொடர்ச்சியாகவே அண்மைக்காலங்களில் மியன்மாரில் முஸ்லிம் மக்களுக்கெதிராக
அந்த நாட்டு அரசு எடுத்த வருகின்ற மோசமான நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மேலும் அவர்களுக்கெதிராக
அப்பகுதிகளில் வெடித்துள்ள வன்முறைகளை கட்டப்படுத்தவதிலும்கூட பர்மிய அரசு அக்கறை காட்டாத நிலையே
காணப்படுகின்றது. இதனால் சர்வதேச அளவில் அந்நாட்டுக்கு எதிராகப் பல்வேறு கண்டனத் தீர்மானங்களும்
நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும் அண்மைக்காலங்களில் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள்
சர்வதேசங்களின் அழுத்தத்தின் பின்னணியில் ஓரளவு குறைந்துள்ளதென்றே சொல்ல வேண்டும். அதேநேரத்தில்
அது முற்றாக குறைந்து விட்டதென்றும் கூறமுடியாது. தற்போது பர்மிய அரசு புலம்பெயர்ந்த ரோஹிங்ய
அகதிகளை மீளவும் அழைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வரலாற்று அணுகுமுறையின்
அடிப்படையில் அமையப்பெற்ற இவ்வாய்வுக்குத் தேவையான தரவுகள் முதற்தர மற்றும் இரண்டாம் நிலைத் தiவுகள் என்ற
அடிப்படையில் பெறப்பட்டுள்ளன. இவற்றில் நேர்காணலகள்;, வினாக்கொத்துக்கள், அவதானிப்பக்கள்,
நூல்கள், பத்திரிகைகள், கட்டுரைகள் என்பன பிரதான இடத்தினைப் பெற்றுள்ளன. மேலும் ரோஹிங்ய
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணி, அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள், அதற்கு எதிராக
சர்வதேசங்கள் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் போன்றவற்றினை வெளிக்கொணர்வதே இவ்வாய்வினது பிரதான
நோக்கங்களாக உள்ளன. எனவே இனவாதமும், மதவாதமும் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு தேசத்தில் எப்போதும் கைவிடப்பட்ட
ஒரு இனமாகவே சிறுபான்மையினம் இருக்கும் என்பது வரலாறு கற்றுத் தருகின்ற பாடங்களில் ஒன்று.
சர்வதேசங்கள் இவர்களது அழிவில் குளிர் காயும் என்பதே உண்மை.