Abstract:
இந்து சமுதாய மையங்களாக இந்துக்கோயில்கள் விளங்குவதனால், இந்துக்கோயில்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இந்து சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளாகக் கருதி அவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத்தகையதோர் பின்புலத்தில் 'இந்துக்கோயில்களின் நிர்வாகமும் முகாமைத்துவமும் - முல்லைத்தீவு மாவட்ட இந்துக்கோயில்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு' எனும் இவ்வாய்வானது தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வாக அமைகிறது.இந்துப்பண்பாட்டியல் ஆய்வு என்ற வகையில் இந்து சமுதாய மையங்களாக விளங்குகின்ற இந்துக் கோயில்களின் நிர்வாக முகாமைத்துவம் தொடர்பிலான கரிசனை இந்த ஆய்விற்கான முக்கிய தூண்டற்புள்ளியாக அமைகின்றது.