dc.description.abstract |
சைவம், சித்தாந்தம் என்னும் இருசொற்களின் சேர்க்கையே சைவசித்தாந்தம் ஆகும். சிவத்தொடர்புடைய இத்தத்துவம் சைவர்களின் தனித்துவம் பேணும் முடிந்த முடிபான கோட்பாட்டு விளக்கமாகவுமுள்ளது. காலந்தோறும் தோன்றி வாழ்ந்த அறிஞர்கள் பலரும் இக்கோட்பாட்டுச் செல்நெறியின் தெளிவுறு நிலைக்கு பங்களிப்புச் செய்து வந்துள்ளனர். இந்தியாவில் சைவ சித்தாந்த சிந்தனைகள் கருவாகி முடிவான கோட்பாடாக தருவிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் செவ்விய தன்மைக்கு பங்களிப்புச் செய்தோரில் ஈழத்தவர்க்கு தனித்த சிறப்பும், தனிப்பெரும் அடையாளமும் உண்டு. 19ஆம், 20ஆம் நூற்றாண்டுச் சைவசித்தாந்தச் செல்நெறி இலங்கையருக்குரியது எனக் கூறத்தக்க வகையில் இலங்கையரின்,சைவசித்தாந்தப் புலமையும், அதன் நிலைப்படுத்தலுக்கானதும் அறிவுப் பரம்பலை விரிவுறச் செய்வதற்குமான முன்னெடுப்புகளும் விசாலமான வையாகக் காணப்பட்டன. சைவ சித்தாந்த இருப்பின் நீட்சிக்குப் பங்களித்த ஈழத்து அறிஞர்கள் பலருளர். அவர்களுள் வடகோவை வி.வேலுப்பிள்ளையும் ஒருவர். இவரது சைவ வாழ்வியலும், சைவ நூற்புலமையும், மற்றும் சைவ சித்தாந்த வளர்ச்சிக்கான பங்களிப்புக்களும் ஆய்ந்து வெளிவராதிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அவரது சைவ சித்தாந்தப் புலமையின் வெளிப்பாடாக சித்தாந்த சைவ சங்கிரகம் திகழ்கிறது. செய்யுள்நடையிருந்த சைவ சித்தாந்தப் பொருண்மையை உரையாடலாக்கி வினாவிடை வடிவில் எளிமைப்படுத்தி மக்கள் மயப்படுத்தும் முயற்சியாகஇந்நூல் அமைகிறது. இவ்வகையில் முப்பொருண்மைத் தெளிவுபடுத்தலில் வேலுப்பிள்ளையின் சித்தாந்த சைவ சங்கிரகம் பெறுமிடத்தினை ஆராய இக்கட்டுரை எத்தனிக்கின்றது. |
en_US |