dc.description.abstract |
சமுதாயத்தின் இயக்கத்திற்கு இன்றிமையாதனவாக உள்ள சமூக அமைப்புக்களில் அரசியல் அமைப்பான அரசு என்பதும் முக்கிய அங்கமாக விளங்குகிறது. சமூகவியல் மற்றும் சமூக தத்துவவியற்புலங்களில் அரசு என்னும் அரசியல் அமைப்புப் பற்றிய விரிவான ஆய்வுகள் காணப்படுகின்றன. பண்டைக்காலத்தில் மக்கள் நலச்சார்புடைய சிந்தனையாளர்கள் பலரும் சமயம் சார் பின்னணியில் அறவொழுக்கத்தை மையப்படுத்தி அரசு(அரசியல் அமைப்பு), அரசாங்கம்(நிர்வாக அமைப்பு) பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளனர். சமயங்களானவை மக்களின் வாழ்வியலை அறமுறையில் நிலைப்படுத்தவே முயன்றுவருகின்றன. குறிப்பாக இந்துசமயப்புலத்தில் எழுந்த எண்ணற்ற இலக்கியங்களும், அவற்றின் ஆக்க கர்த்தாக்களான சமயப்பெரியர்களும், அறிஞர்களும் இத்தகைய வாழ்வியலுக்கு வேண்டிய உபாயங்களைக் கூறியிருக்கின்றனர். இச்சிந்தனையில் சைவ இலக்கிய வரலாற்றில் திருமூலருக்கும் அவரது படைப்பாக்கமான திருமந்திரத்திற்கும் தனித்துவமான இடமுண்டு. |
en_US |