Abstract:
சமயப் பண்பாடு என்பது சமூகக் கட்டுப்பாட்டினை ஏற்படுத்தும் கருவியாகவே இருந்து வருகின்றது. அனைத்துச் சமயங்களும் தோன்றிய காலம் தொட்டு சமூகக் கட்டுப்பாட்டினை நிர்வகித்துவருகின்றன. இச்சமய சமூக நிறுவனங்களுள் வீரசைவமும் ஒன்றாக விளங்குகின்றது. சமய மற்றும் சமுதாய நிலையில் சமுதாயப் புரட்சியோடும், கிளர்ச்சியோடும் உருவாக்கம் பெற்ற சமயங்களின் வரிசையில் வீரசைவம் முதன்மையும் முக்கியத்துவமும் பெறுகின்றது. பன்னிரெண்டாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த பசவர் என்பவரின் சமூக சீர்திருத்த நோக்கோடு இச்சமய சிந்தனை விரிவடைந்து பல பிரதேசங்களுக்கும் பரவலடைந்து மேல் நிலை பெற்று விளங்குகின்றது. இந்த வகையில் இச்சமயத்தின் செல்வாக்கினையும் தாக்கத்தினையும் இலங்கையிலும் உணர முடிகின்றது. தனித்துவமான சமய சமூக பண்பாட்டுப் பேணலுடைய யாழ்ப்பாணத்து பண்பாட்டுச் சூழலில் வீரசைவம் எனும் சைவப் பிரிவும் சிறப்புற்று விளங்குவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.