Abstract:
இன்று சர்வதேச அளவில் பேசப்படுகின்ற பிரச்சனைகளிலொன்றாகக் காணப்படுவது ஸ்பெயின் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் காணப்படுகின்ற கற்றலோனியா சுயாட்சிப் பிராந்தியத்தினது (ஊயவயடரலெய) தனி அரசிற்கான பிரிவினைக் கோரிக்கையும் அதற்கு எதிரான ஸ்பெயினுடைய நடவடிக்கைகளுமாக உள்ளது. ஏறத்தாழ ஜந்து இலட்சத்திற்கும் அதிகமான ஸ்பெயினின் மொத்தப் பரப்பளவில் கற்றலோனியாவினது விஸ்திரமானது 32இ000 சதுரக் கிலோமீற்றருக்கும் சற்று அதிகமானது. மேலும் 75 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையினைக் கொண்ட இப் பிரதேசமானது மிகவும் செல்வச் செழிப்பான பிரதேசமாக உள்ளது. இப்பகுதி ஸ்பெயினினுடைய பொருளாதாரத்தில் கணிசமான அளவு பங்கினையும் வகித்து வருகின்றது. நாட்டினது சராசரி தனிநபரது வருமானத்தினை விட இதன் தனிநபர் வருமானமானது அதிகம். தமது நாட்டுப் பொருளாதாரம் ஸ்பெயினால் சுரண்டப்படுவதாகவும் அந்தளவிற்கு தாம் கவனிக்கப்படுவதில்லை என்பதும் தமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை ஸ்பெயின் வழங்குவதில்லை என்பதும் கற்றலோனியா மக்களது குற்றச் சாட்டாகவுள்ளது. இத்தகைய கற்றலோனியாவினது தனிநாட்டுக்கான கோரிக்கையின் வரலாறானது நீண்டகாலமாக இருந்தாலும்கூட கடந்த ஐந்து வருடங்களாக இக்கோரிக்கையானது வலுப்பெற்று வருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது. இதற்கு ஸ்பெயினுடைய அசிரத்தையான போக்கும் கற்றலோனியா தேசியவாதிகளின் எழுச்சியும் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன. இவ்விடயமாக அண்மையில் ஸ்பெயினுடைய எதிர்ப்பினையும் பொருப்படுத்தாமல் தனது பகுதியில் மக்களது கருத்தினை அறியுமுகமாக கருத்துக்கணிப்பிற்கான வாக்கெடுப்பொன்றினையும் கற்றலோனியா நடாத்தியது. இவ்வாக்கெடுப்பில் ஏறத்தாழ 90மூ சதவீதமானவர்கள் ஸ்பெயினிலிருந்து கற்றலோனியா பிரிவதற்கான சம்மதத்தினைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இத் தேர்தலை வன்மையாக் கண்டித்த ஸ்பெயின் அரசு தமது அரசியலமைப்பினை மதித்துச் செயற்படத் தவறினால் கற்றலோனியா அரசினது சுயாட்சியை இரத்துச் செய்து தனது நேரடியான ஆட்சியினை அப்பகுதிகளில் பிரகடனப்படுத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளது. இந்நிகழ்வானது சர்வதேச அரங்கில் விளைவுகள் பலவற்றினை ஏற்படுத்தியுள்ளன. உலக நாடுகள் பல கற்றலோனியாவினை அங்கீகரிக்கவில்லை. இன்று ஜரோப்பிய நாடுகள் பலவற்றில் தனிநாட்டுக்கான போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் கற்றலோனியா ஸ்பெயினிலிருந்து பிரியுமானால் அது மேற்குறித்த நாடுகளுக்கு சாதகமாக அமைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். இதனால் இத்தகைய பிரிவினை ஜரோப்பிய நாடுகள் பலவும் விரும்பவில்லையென்பதே உண்மை. வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் அரசியல் விமர்சன ஆய்வாக அமைகின்ற இவ்வாய்வானது பத்திரிகைகள்இ நூல்கள்இ நேர்காணல்கள்இ அவதானிப்புக்கள்இ இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் போன்றவற்றினை பிரதான ஆதாரங்களாக கொண்டுள்ளது. இப்பிரச்சினைக்கான அடிப்படை காரணங்கள்இ எதிர்காலத்தில் இப்பிரச்சினையினால் ஸ்பெயின் எதிர்கொள்;ளவுள்ள சவால்கள்இ இது சர்வதேச அரங்;கில் ஏற்படுத்தப்போகினற தாக்கங்கள் போன்றவற்றினை வெளிக்கொண்டு வருவதென்பது ஆய்வினது பிரதான நோக்கங்களாக காணப்படுகின்றன. கற்றலோனிய மக்களது போராட்டமானது உலக உரிமை வேண்டிப் போராடி வருகின்ற நாடுகள் பலவற்றுக்கு எடுத்துக்காட்டாக வருங்காலங்களில் அமையுமென்பது நிச்சயம்.