dc.description.abstract |
தமிழகத்தினைச்சேர்ந்த அரசியல்வாதிகளுள் தனக்கென ஒரு இடத்தினைப்பெற்று உலகளாவிய ரீதியில் செல்வாக்குப்பெற்ற ஒருவராக விளங்குபவர் செல்வி ஜெயராம் ஜெயலலிதா அவர்கள். எவ்விதமான அரசியல் பின்னணியுமற்று பிறந்து வளர்ந்த இவர் சினிமாத்துறைக்குள் நுழைந்து, எம்.ஐp.இராமச்சந்திரன் உதவியுடன் அரசியலில் இணைந்து, அவரது மரணத்தின் பின்னராகப் பலத்த சவால்களின் மத்தியில் தமிழகத்தில் முதலமைச்சரானவர். 1991 இல் முதலாவது தடவையாக முதலைமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட இவர் தொடர்ந்து பல்வேறு வகையான நிலத்திட்டங்களை அறிவித்து அதன்படி செயற்பட்ட செல்வி ஜெ.ஜெயலலிதாவினுடைய தனிப்பட்ட அரசியல் ஆளுமையானது பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. இந்தியாவில் பிற மாநிலங்களில் பெண் முதலமைச்சர்களின் ஆட்சிமுறை அவ்வப்போது இருந்த போதும்கூட அவர்களை எல்லாம் விஞ்சும் வகையில் அவரது செயற்பாடுகள் காணப்பட்டதன் பின்னணியில் தமிழகத்தில் தற்போதும் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள முதலமைச்சராக அவர் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனது இவ்வாய்வானது ஜெயலலிதாவினுடைய தனிப்பட்ட அரசியல் ஆளுமையின் இயல்பினையும், அரசியலில் அவர் தற்காலம் வரை எதிர்கொண்டிருக்கின்ற சவால்களையும், அவற்றில் அடைந்த வெற்றிகள் மற்றும் தோல்விகள், எதிர்காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் போன்றவற்றினையெல்லாம் nவி;ப்படுத்துவதனைப் பிரதான நோக்கங்களாகக் கொண்டுள்ளது. அரசியல் விமர்சன நோக்கில் அமைந்துள்ள இவ்வாய்வானது முதற்தர மற்றும் இரண்டாந்தர தரவுகளை ஆய்விற்கான ஆதாரங்களாகப் பயன்படுத்தியுள்ளது. அவ்வகையில் இவ்வாய்வானது பெருமளவிற்கு அரசியல் சார்ந்த விமர்சன நோக்கில் நிற்பதுடன் பரந்துபட்டதாகவும் உள்ளது. பண்புசார் தகவல்களை பெருமளவிற்கு அடிப்படையாகவும் இவ்வாய்வானது கொண்டமைந்துள்ளது. நேரடி அவதானிப்புக்கள், நேர்காணல்கள், வினாக்கொத்துக்கள், போன்றன முதற்தர ஆதாரங்களாகவும் அரசியல் அறிக்கைகள,; ஆவணங்கள், நூல்கள், பத்திரிகைகள், கட்டுரைகள், இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் என்பன ஆய்வில் இரண்டாம் தர ஆதாரங்கள் வரிசையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுப்பட பார்க்கும் போது இந்தியாவிலேயே பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் அமர்ந்த இந்திய பெண் முதலமைச்சர்களில் அதிகளவான செல்வாக்கினை பல்வேறு வழிகளில் பெற்ற ஒருவராக விளங்குகின்ற இவர் பல்வேறு ஊழல் வழக்குகளிலும் அவ்வப்போது சிக்கித்தவிக்கின்றமை இவரது ஆட்சியினை பற்றி விமர்சிப்பவர்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. தனது பதவிக்காலம் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு அரசியல் சிக்கலில் மாட்டிக் கொள்ளுகின்ற இவர் வருங்காலங்களில் இவ்விடயமாக எச்சரிக்கையாக இருப்பதும் இவருக்கும் இவர் சார்ந்த கட்சிக்கும் பயனளிப்பதாக அமையும். |
en_US |