Abstract:
இவ் ஆய்வுக் கட்டுரையானது நீண்டகாலமாக வறுமையின் பிடிக்குள் அகப்பட்டு வாழ்ந்து வரும் கோப்பாய் பிரதேசத்தில் உள்ள செல்வபுரக் கிராம மக்கள் எதிர்கொள்ளும் உளவியல் சார் பிரச்சினைகளினை பகுப்பாய்வின் அடிப்படையில் ஆய்வு செய்வதாக அமைகின்றது. போருக்குப் பிந்திய யாழ்ப்பாணப் பிராந்தியமானது பல்வேறுபட்ட வளர்ச்சி, அபிவிருத்திப் பாதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில் மேற்கூறிய கிராம மக்கள் வாழ்க்கை முறையானது வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வறுமையின் விளைவினால் ஏற்படும் உளவியல் தாக்கங்களினைச் சமாளிக்க முடியாதவர்களாக வாழ்ந்து வருகின்றதனை அவதானிக்கமுடிகின்றது. பல்வேறுபட்ட சமூக ஆர்வல நிறுவனங்களும் இக் கிராமம் மீது பாராமுகமாகேவ இருந்து வருகின்றன. இந்நிலையில் வறுமையினால் உண்டாகும் சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியான விளைவுகள் இம்மக்களிடத்தில் எவ்வாறான உளரீதியான விளைவுகளினை ஏற்படு;தியுள்ளது என்பதனையும் அவ்வாறான விளைவுகள் அம்மக்களின் நடத்தைக் கோலங்களினை எவ்வாறு மாற்றி அமைத்துள்ளது என இவ் ஆய்வுக் கட்டுரையானது ஆராய்கின்றது.