dc.description.abstract |
இந்த ஆய்வானது முதியோர்களுடைய, வெறுங்கூட்டு;நிலையால் ஏற்படும்; உள-சமூக விளைவுகளை இனங்காணலினை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதியோர்கள் அனுபவத்தின் உறைவிடமாக பாhக்கப்படுகின்றனர். முதியவர்கள் உள்ள சமூகம் பாக்கியம் உள்ளது. ஆனால் தற்காலத்தில் முதியவர்களை சுமையாகவும், வேண்டாதவர்களாகவும் உதாசீனம் செய்யும்நிலை வருந்தத்தக்கது. இதனால், அனுபவசாலிகளாக இருந்தாலும் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். யாழ் மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் போர்ச்சூழல் ,பிள்ளைகள் பிரிந்து வெளிநாடு செல்லல்,கணவன்,மனைவி இழப்புக்கள்,பிள்ளைப்பேறு அற்ற நிலைகள், நோய்கள் ;(பார்வை,கேட்டல் குறைபாடு),கூட்டுகுடும்ப அமைப்பு சிதைவுறல் (சண்முகலிங்கன்,2007) போன்ற காரணங்களால் வெறுங்கூட்டுநிலைக்கு ஆளாகின்றனர். இதனால்இ முதியோர்கள் வெறுங்கூட்டுநிலையால் உள, நடத்தை, மனவெழுச்சி, சமூக ரீதியான தாக்கங்களை எதிர்கொள்கின்றனர். இந்த ஆய்வினை மேற்கொள்வதற்கு 15 கிராமசேவையாளர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு தனியாக வாழும் முதியோர்கள் ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவிலிருந்தும் 25மூ அடிப்படையில் 102பேர் எழுமாற்றாக தெரிவுசெய்யப்பட்டனர்;. இங்கு இவற்றுக்கான தரவுகளைப் பெறுவதற்காக ஆய்வாளனால் சுயமாகத் தயாரிக்கப்பட்ட வினாக்கொத்து கையளிக்கப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளானவை ளுPளுளு Pயஉமயபந மூலம் எளிய புள்ளிவிபரவியல் முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இவ் ஆய்வின் முடிவுகளாக பின்வருவனவற்றினை நோக்கலாம்: வெறுங்கூட்டுநிலையால் முதியவர்கள் உளரீதியாக சிந்தனையில் சிக்கல் தன்மை (P-0.00) மற்றும் தனிமையினை உணர்கின்றனர்( P-0.00),நடத்தை ரீதியாக நித்திரைக்குறைவு (P-0.00) மற்றும் பசிக்குறைவினை (P-0.00)வெளிப்படுத்தியிருந்தனர். மனவெழுச்சி ரீதியாகஅடிக்கடி கவலையாக இருத்தல் (P-0.00)இமனதில் சந்தோசமற்ற நிலையை உணர்தலையும் (P-0.00)இசமூக ரீதியாகசமூகத்தில் முன்வந்து செயற்பட விரும்பவில்லை (P-0.00) என்றவாறு விளைவுகளினை எதிர்கொள்கின்றனர். இதனை விட வெறுங்கூட்டுநிலையால் ஆண்களை (37.3மூ)விட பெண்களே (42.2மூ) அதிகம் தாக்கமடைகின்றார்கள். |
en_US |