Abstract:
'புற்றுநோயாளர்கள் தமது நோய்நிலைமையை ஏற்றுக்கொள்வதில் எலிசபெத் குப்லர் ரோஸினது இறத்தல் கோட்பாட்டின் பொருத்தப்பாடு'என்ற இவ்ஆய்வின் நோக்கம் புற்றுநோயாளர்கள் தமது நோய்நிலைமையை ஏற்றுக்கொள்வதில் குப்லர் ரோஸினது மரணம் மற்றும் இறத்தல் கோட்பாட்டின் பொருத்தப்பாட்டினை ஆராய்வதாகும்.தெல்லிப்பளை, நல்லூர், சுண்ணாகம், மருதனார்மடம், மானிப்பாய், கிளிநொச்சி போன்ற இடங்களைஅடிப்படையாகக் கொண்டு 20 மாதிரிகள் நோக்கம்சார் எழுமாற்று மாதிரி மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இவ் ஆய்வானது பண்புசார் அடிப்படையில் நேர்காணல் முறையில் வடிவமைக்கப்பட்டது. ஆய்வின் தரவுகள் உள்ளடக்க பகுப்பாய்வுக்கு (ஊழவெநவெ யுயெடலளளை) உட்படுத்தப்பட்டது. ஆய்வு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுபேறுகளாவன, புற்றுநோய்நிலைமையை ஏற்பதில் மாதிரிகள் குப்லரின் இறத்தல்கோட்பாட்டினை கடந்து செல்கின்றனர். இருப்பினும் புற்றுநோய்நிலைமையை ஏற்பதில் குப்லரின் படிநிலை ஒழுங்கினை மாதிரிகள் கொண்டிருக்கவில்லை. மாதிரிகளிடத்தில்; மறுப்பு நிலை என்பது நோய்நிலைமையை சமாளிக்கும் யுக்தியாக அமைந்துள்ளது. தமது நோய்நிலைமையை மறுக்கும் நோயாளர்களின் வெளிப்பாடாக கோபவுணர்வு அமைந்துள்ளது. மாதிரிகள் நோய்நிலைமையை கையாள்வதில்பேரம்பேசும் படிநிலையை கொண்டுள்ளனர். இதற்காகஆன்மீக செயற்பாடுகள் மற்றும் குடும்ப பொறுப்புக்களை காரணம் சாட்டுதல் போன்றவற்றை கையாள்கின்றனர். மாதிரிகள் மனச்சோர்வு படிநிலையிலேயே அதிகம் துலங்குகின்றனர்.மாதிரிகள் தமது ஏற்றுக்கொள்ளும் படிநிலையை போராடி பயனற்ற நிலை எனும் இறுதி கட்டத்திலேயே கையாள்கின்றனர.;இவ்ஆய்வானது பண்புசார் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் எதிர்கால ஆய்வாளர்கள் அளவுசார் ஆய்வுமுறையையும் கையாள்வது சிறப்பாக அமையும்.