Abstract:
இந்த ஆய்வானது யாழ்பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் ஆண்டு மாணவர்களிடையே உள்ள மனஅழுத்த நிலைகளினையும் அவ் மனஅழுத்தத்திற்குக் காரணமாக உள்ள காரணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்வதாக அமைந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தமது உயர்கல்வியினைக் கற்கின்ற போது பல்வேறு பட்ட மனஅழுத்தத்தினைத் தூண்டும் காரணங்களிற்கு முகம் கொடுப்பதனால் கற்றல் சார்ந்த மனஅழுத்தத்திற்கு உட்படுகின்றனர். இவ்ஆய்வினை மேற்கொள்வதற்கு யாழ்பல்கலைக்கழகத்தில் 2011ஃ 2012 ஆண்டு கல்வியாண்டில் கல்வி பயிலும் இரண்டாம் ஆண்டு விசேட கலை மாணவர்களில் 100 மாணவர்கள் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டு அவர்களிற்கு மனஅழுத்தத்தினை அறிந்து கொள்வதற்கான வினாக்கொத்து வழங்கப்பட்டு கிடைக்கப் பெற்ற தகவல்கள் ளுPளுளு மூலம் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. பகுப்பாய்வின் அடிப்படையில் பெரும்பாலான (35மூ) மான மாணவர்கள் மிதமான அடிப்படையில் கற்றல் சார் மனஅழுத்தத்திற்கு உட்படுவதாகவும் இம் மனஅழுத்தத்தினைத் தூண்டும் காரணிகளாக வகுப்பறையில் மாணவர்கள் குழுக்களாகச் செயற்படல், கற்ற விடயங்களினை ஞாபகப்படுத்துவதில் சிக்கல், ஆர்வமற்ற பாடங்களினை பயில நிர்ப்பந்தித்தல், பெற்றோரின் மிகையான எதிர்பார்ப்பு, விரிவுரையாளர்கள் கருத்துக்களினை செவிமடுக்காமை, வேலைப் பழு, குறைவான ஆங்கில அறிவு, பெறுபேறு குறித்த கவலை, விரிவுரை மண்டபங்கள் போதாமை போன்றன காணப்படுகின்றன.