Abstract:
ஒருதனிமனிதனின் முழுமையானவிருத்தியில் குடும்பஉறவுகளின் பங்களிப்புகள் மிகவும் அத்தியாவசியமானதுஎன்பதுஉளவியல் உண்மை. இன்றையகாலத்தில் அத்தகையகுடும்பஉறவுகளின் முக்கியத்துவம் அறியப்படாமல் அவைஉதாசீனப்படுத்தப்படுகின்றன. இதனால் பெற்றோர்களும் பிள்ளைகளும் உளரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையினைசரியானமுறையில் கையாண்டுகொள்வதற்குகுடும்பஉறவுகளில் கணவன் மனைவியின் நடத்தைக் கோலங்களினையும்,பெற்றோர் பிள்ளைஉறவின் நடத்ததைக் கோலங்களினையும்,குடும்பஉறவினைமேம்படுத்தஉதவும் நுட்பங்களினையும் உலகப் பொதுமறை நூலாம் திருக்குறளில் முன்மொழியப்பட்டகருத்துக்களினைஆதராமாகக் கொண்டுதொகுத்துக் கூறுவதே இவ் ஆய்வின் நோக்கமாகக் காணப்படுகின்றது. இதற்காகதிருக்குறளின் விளக்கஉரை நூல்களில் இருந்து இரண்டாம் நிலையடிப்படையில் தரவுகள் பெறப்பட்டுஅவைவிபரணரீதியாகபொருள்கோடல் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் திருவள்ளுவர் குடும்பஉறவுகளினைக் குறிப்பாககணவன்- மனைவிஎவ்வாறுநடந்துகொள்ளவேண்டும் என்பதனையும் மற்றும் பிள்ளை- பெற்றோர் உறவுமுறையின் முக்கியத்துவம் அதன் தன்மைதொடர்பாகவும்சிறந்தகருத்துக்களினைக் கூறியுள்ளார். அக் கருத்துக்கள் தனிமனிதனின் முழுமையானஉளரீதியானமுதிர்ச்சிக்கு இட்டுச்செல்வதுடன் அவைஒருமனிதனைஆரோக்கியமாகவாழவைக்கும் என்பதுதிண்ணம்.