Abstract:
உளவியல் என்பதுதனிநபரின் நடத்தையினைவிஞ்ஞானபூர்வமாகக் கற்கும் ஓர் துறை. அந்தவகையில் இத்துறையானதுதன்னகத்தேபல்வேறுபிரிவுகளினைக் கொண்டுள்ளது. அதில் ஒன்றுதான் நலன்பேண் உளவியல். இந்தநலன்பேண் உளவியல் தனிமனிதநலனில் செல்வாக்குச் செலுத்தும் அனைத்துப் பரப்பிலும் கவனம் செலுத்துகின்றது. அதாவதுதனிமனிதஉடல் மற்றும் உளநலன் எவ்வாறு இருக்கவேண்டும்,அதனைமேம்படுத்தஉணவுநடத்ததைமுதல் ஆரோக்கியமானபழக்கவழக்கங்கள் வரைகவனம் செலுத்துவதுமட்டுமின்றிநலன் தொடர்பாகபணிபுரியும் நலன்பேண் உத்தியோகத்தர்கள் வரைதனதுகவனத்தைச் செலுத்துகின்றது. இது மேலைத்தேயஉளவியலாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டதுறையாகஉள்ளபோதும் நமதுஉலகப் பொதுமறை நூலாம் திருக்குறளிலும் இந்தநலன்பேண் நடத்;தைகள் தொடர்பானகருத்துக்கள் இடம்பெற்றிருப்பதனைக் காணக்கூடியதாகஉள்ளதுசிறப்புக்குரியது. ஆத்தகையகருத்துக்களினைதொகுத்துக் கூறுவதே இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். இதற்காகதிருக்குறளின் விளக்கஉரை நூல்களில் இருந்து இரண்டாம் நிலையடிப்படையில் தரவுகள் பெறப்பட்டுஅவைவிபரணரீதியாகபொருள்கோடல் செய்யப்பட்டுள்ளது.