Abstract:
இவ் ஆய்வானது கர்ப்பகாலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் உளசமூக சவால்களினை கண்டறிவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. கர்ப்பகால உள, உடல் சார்ந்த ஆரோக்கியம் பிள்ளையின் எதிர்கால நலன் சார்ந்து அவசியமாகின்றது. இந்தவகையில் யாழ்மாவட்டத்தில் உள்ள கோண்டாவில் பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு 'கோண்டாவில் பிரதேச சுகாதார வைத்தியசாலைக்கு கர்ப்பவதிபரிசோதணைக்காக வந்து செல்லும் ஐந்து கிராமசேவையாளர் பிரிவுகளை சேர்ந்த பெண்களை 60 மாதிரிகளாக ஆய்வுக்காக உள்வாங்கப்பட்டுள்ளது. இவ்வாய்வானது அளவு மற்றும் பண்பு ரீதியான தரவுகளை அடிப்படையாக கொண்டு விவரணபபகுப்பாய்வு முறையில் முதலாம், இரண்டாம் நிலை தரவுகளை உள்வாங்கி மேற்கொள்ளப்பட்டது. இங்கு உளவியல் தரவுகளைப் பெறுவதற்காக 42 வினாக்கள் உள்ளடங்களாக வினாக்கொத்து ஆய்வாளனால் சுயமாகத் தயாரிக்கப்பட்டுக் கையளிக்கப்பட்டது. இரண்டாம் நிலை தரவுகள் இணையத்தளம், பத்திரிகை, புத்தகங்கள், சஞ்சிகைகள், என்பவற்றின் மூலம் பெறப்பட்டது. பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளானவை ளுPளுளு Pயஉமயபந மூலம் எளிய புள்ளிவிபரவியல் முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டது ஆய்வு முடிவுகளாக கர்ப்பகாலத்தில் பெண்கள் சோர்வடைதல், எரிச்சலடைதல், அடிக்கடி உணர்வுகளில் மாற்றம் ஏற்படுதல், பிரசவத்தினை எண்ணிய பதட்டம், மனஅழுத்தம் போன்ற உளச்சமுக சவால்களை எதிர்கொள்கின்றனர.; குறைந்த வருமானத்திற்கும்;; கர்ப்ப காலத்தின்போதான உளச் சவால்களிற்கும் தொடர்பு காணப்படுகின்றது.75மூ ஆனோர் 1- 3 மாத கர்ப்ப காலப்பகுதியிலேயே அதிகம் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.